150 பத்திரிக்கை ஆசிரியர்கள், நிருபர்கள் கைது
சென்னை:
விழுப்புரம் சன் டிவி நிருபரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் வெள்ளிக்கிழமை ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்நடத்திய 150 க்கும் மேற்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் உள்ள தானியக் கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசியில் புழுத்த அரிசி இல்லை என்றுநிரூபிப்பதற்காக, செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் சகிதம் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அந்தக் கிட்டங்கிக்குச்சென்று நல்ல அரிசிதான் உள்ளது என்று விளக்கினார்.
இதையடுத்து பொன்முடி மற்றும் சில திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் திடீரென விழுப்புரம் சன் டிவிநிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். இது சென்னை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் வியாழக்கிழமைபத்திரிக்கையாளர்கள் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மனுவை வாங்க மறுத்து விட்டார். இதனால்தலைமைச் செயலக சாலையில் போலீஸாருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பெரும் "தள்ளுமுள்ளு" ஏற்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ளஅரசினர் விருந்தினர் இல்லம் முன்பு 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் வாயில் கருப்புத் துணியுடன் குவிந்தனர்.
இவர்களில் முக்கியமானவர்கள் "தினமணி" ஆசிரியர் ஆர்.எம்.டி. சம்பந்தம், "நக்கீரன்" ஆசிரியர் கோபால், "சன் டிவி" செய்திஆசிரியர் மாலன், "சன் டிவி" ஆசிரியர் பன்னீர்செல்வன், "நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்" தலைமை நிருபர் டி.என். கோபாலன் மற்றும்சன் டிவியில் பணிபுரியும் பல நிருபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மத்திய வன மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறைஅமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகளும் அடங்குவார்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் பின்னர் அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு ஊர்வலமாக செல்லமுயன்றனர். உடனடியாக சன் டிவி நிருபரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, போலீஸார் அவர்களை உடனடியாக கலைந்து போகுமாறு உத்தரவிட்டனர். ஆனால் பத்திரிக்கையாளர்கள் அதைச்சட்டை செய்யவில்லை. இதையடுத்து அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கைது செய்து போலீஸ் வேனில் அழைத்துச்சென்றனர்.
இந்த விஷயம் குறித்து, தேசிய மனித உரிமைக் கமிஷன் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பிரதமர் வாஜ்பாய்ஆகியோரிடம் புகார் செய்யப்போவதாக சன் டிவி தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications