ஜெ. முதல்வரானதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றதைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
ஜெயலலிதா 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றுள்ளதால் சட்டசபைத் தேர்தலில் அவரதுவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இருந்த போதிலும், சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பாத்திமாபீவி பதவிப்பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.
எந்த அடிப்படையில் ஆளுநர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா முதல்வாரானதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த 2 மனுக்களிலும்கூறப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயின், சம்பத் மற்றும் தங்கவேலு ஆகியோர் முன்னிலையில்வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத்தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் நாங்கள் ஏதும் கூறமுடியாது. எனவே,இந்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications