9 குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ராட்சஷிகள்
கோல்காபூர்(மகாராஷ்டிரா):
குழந்தைகளைக் கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்த இரு சகோதரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்துமகாராஷ்டிரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுதவிர தூக்குத்தண்டனை பெறும் வரை இவர்கள் 5 ஆண்டுகள், 7 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ70,000 அபராதமும் அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் மகாராஷ்டிரா செஷன்ஸ் கோர்ட் கூறியுள்ளது.
கோல்காபூரில் வசித்து வந்தவர் அஞ்சனா பாய். இவரது மகள்கள் ரேணுகா ஷின்டே மற்றும் சீமா காவித்.
அஞ்சனா தலைமையில் இவர்கள் நான்கு பேரும் 1990 ம் ஆண்டு முதல் கோல்காபூர் உள்பட பல ஊர்களில் கூட்டம்அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் கடத்தி வந்தனர்.
கடத்தப்பட்ட குழந்தைகளை பிச்சையெடுக்கவும், திருடவும் வைத்து வந்தனர். பின்னர் சித்ரவதை செய்துகொடூரமான முறையில் கொலை செய்து வந்தனர்.
குழந்தைகளைக் கொலை செய்தபின் சடலங்களை கோணிப்பையில் வைத்து அப்புறப்படுத்தியுள்ளனர். இவர்கள்இதுவரை 13 குழந்தைகளைக் கடத்தி 9 குழந்தைகளைக் கொலை செய்துள்ளனர். இதுவரை 6 கொலைச்சம்பவங்கள சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் கொலை செய்த குழந்தைகளின் பெயர் விவரம்:
பங்கஜ் மாஹ்மூல் (4), அஞ்சலி திவான் என்ற பிங்கி (2), சந்தோஷ் (ஒன்றரை வயது), பாக்யஸ்ரீ (1), ஸ்வப்னிஸ் (1)மற்றும் கவுரி (ஒன்றரை).
மேலும் 3 குழந்தைகளின் கொலைகள் இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவர்கள் பெயர் பென்டி (1), குட்டு(ஒன்றரை) மற்றும் கிரந்தி (9).
கடத்தப்பட்ட குழந்தைகளில் கொலை செய்யப்படாமல் தப்பியவர்கள் பெயர் விவரம்:
சச்சின் (10), நரேஷ் (9 மாதங்கள்), மீனா (மூன்றரை வயது) மற்றும் ஸ்வாதி (3).
அஞ்சனா தலைமையிலான கும்பல் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்து வருவது 1996 ம் ஆண்டுவெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து நான்கு பேரும் கூண்டோடு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
விசாரணை தொடங்குமுன்பே 1997 ம் ஆண்டு அஞ்சனா சிறையில் இருக்கும்போதே மரணமடைந்தார்.
இந்த வழக்கு கடந்த 22 ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை கோல்காபூர் செஷன்ஸ் கோர்ட் கூடுதல் நீதிபதியாட்கி விசாரித்தார். விசாரணை முடிந்ததும் ஜூன் 28 ம் தேதி வியாழக்கிழமை தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.
செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு வியாழக்கிழமை (28ம் தேதி) தீர்ப்புக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதியாட்கி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
அஞ்சனா தலைமையிலான இவர்கள் நான்கு பேரும் மொத்தம் 13 குழந்தைகளைக் கடத்தி, அதில் 6 பேரைக்கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸார், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்பட 156 பேர் சாட்சி அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், குழந்தைகள் கடத்தல், அவர்களை துன்புறத்துதல் மற்றும் கொலை செய்தல் ஆகியகுற்றங்களுக்காக சகோதரிகள் ரேணுகா ஷின்டே மற்றும் சீமா காவித் ஆகியோருக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்படுகிறது. இதுதவிர தூக்குத் தண்டனை பெறும் வரை 5 ஆண்டுகள், 7 மாதங்கள் கடுங்காவல் தண்டனைஅனுபவிக்க வேண்டும். மேலும் தலா ரூ 70,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சனாவின் மருமகன் கிரண் அப்ரூவராக மாறியுள்ளதால், அவர்விடுவிக்கப்படுகிறார் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications