வீரப்பன் சரணடைய வாய்ப்பு கொடுங்கள்: திருமாவளவன்
திருச்சி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பாளர் திருமாவளவன் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் தானாக முன் வந்து சரணடையக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதே அனைவருக்கும் நல்லது. இந்நிலையில்,நல்லெண்ணத் தூதுவராகச் செல்லத் தயார் என்று கூறிய கொளத்தூர் மணியைத் தமிழக அரசு கைது செய்திருப்பதுகண்டிக்கத்தக்கது.
மலைப்பகுதி மக்களிடம் மனித உரிமைக் கமிஷன் விசாரணை நடத்தியபோது, தேவாரத்தின் மேல் மக்கள் பல்வேறுகுற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளனர். அப்படிப்பட்டவரை மீண்டும் அதிரடிப்படைத் தலைவராக நியமித்திருப்பதும் சரியல்ல.
பொதுமக்களுக்கு நன்மை தருவதாக இருந்தால், வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றார்திருமாவளவன்.












Click it and Unblock the Notifications