வீட்டிலிருந்து ஜெயிலுக்கு... போலீஸ் செய்த அடாவடிகள்
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.45 மணி:
ஆலிவர் ரோடு கருணாநிதி வீடு:
ஆலிவர் ரோட்டில் உள்ள வீட்டில் உள்ள முதலாவது மாடியில் கருணாநிதி தூங்கிக் கொண்டிருக்கிறார்.மடமடவென்று வீட்டுக்குள் நுழைந்த சிபிசிஐடி போலீஸார், அவர் தூங்கிக் கொண்டிருந்த அறைக் கதவின்தாழ்ப்பாளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியை வலுக்கட்டாயமாக எழுப்பி, போலீஸார் இழுத்துச் சென்றனர். அதற்குள்விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்துவிட்டனர் மத்திய அமைச்சர்கள் பாலுவும், மாறனும்.
கருணாநிதியை இழுத்துக் கொண்டு செல்வதை இவர்கள் 2 பேரும் எவ்வளவோ தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.ஆனாலும், போலீஸார் அவர்களைப் பக்கத்தில் நெருங்கவே விடவில்லை.
குடும்பத்தினர் கதறல்:
கருணாநிதியை முதலாவது மாடியிலிருந்து கீழே தள்ளி, இழுத்துக் கொண்டு சென்றனர். கருணாநிதி போலீஸாரால்அடித்து இழுத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.
78 வயதில் அவரைப் போலீஸார் தரக் குறைவாக இழுத்துச் சென்றதைக் கண்டு பொறுக்காத குடும்பத்தினர்,எவ்வளவோ தடுக்க முயன்றனர். அவருடைய மகள் கனிமொழியும், அவருடைய கணவரும் கண்ணீர் விட்டுக்கதறினர்.
"அய்யோ தலைவரைக் கொல்றாங்க... கொலை பண்றாங்க" என்று டி.ஆர். பாலுவும் கத்திக் கதறிக் கொண்டேபின்னாலேயே ஓடினார். போலீஸாருடன் ஏற்பட்ட கலகலப்பில் முரசொலி மாறன் கடுமையான காயமடைந்து,தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சி.பி.சி.ஐ.டி. ஆபீஸ்:
ஆனால் போலீஸார் எதையும் கண்டு கொள்ளாமல், கருணாநிதிக் கீழே தள்ளியும், சட்டையைக் கசக்கியும், தூக்காதகுறையாக அள்ளிக் கொண்டு சென்றனர். இவ்வளவு நடந்து கொண்டிருந்த போதும், கருணாநிதி கைலி, வெள்ளைச்சட்டை மட்டுமே அணிந்திருந்தார். முதலில் அவர் சிபிசிஐடி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கைலியுடனே அவர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார்.
சிபிசிஐடி அலுவலக வாசலை முற்றுகையிட்ட அமைச்சர் பாலுவையும், திமுக தொண்டர்களையும் உள்ளேபோவதற்குப் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அங்கும் பெரிய அமளி ஏற்பட்டது. கேட்பக்கத்திலேயே அமைச்சர் பாலு படுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.
போலீஸ் கமிஷ்னர் அலுவலகம்:
பிறகு கருணாநிதியை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். ங்கு அரை மணிஉட்கார வைத்திருந்தனர்.
வேப்பேரி போலீஸ் நிலையம்:
அங்கிருந்து வேப்பேரி காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று அரை மணி நேரத்துக்கும் அதிகமாக உட்காரவைத்தனர்.
நீதிபதியின் இல்லம்:
பிறகு, அவர் சைதைப்பேட்டை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் வீட்டிற்குக் கொண்டுகருணாநிதி செல்லப்பட்டார். கருணாநிதி ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த கே.என்.நம்பியார் ஐ.ஏ.எஸ்.அங்கு வேஷ்டி சட்டையுடன் இழுத்து வரப்பட்டார். தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி அழைத்துவருகின்றனர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள்.
ஜூலை 10 வரை காவல்:
அங்கேயே முதற்கட்ட விசாரணையை நடத்திய அசோக்குமார், ஜூலை 10ம் தேதி வரை கருணாநிதியை சென்னைசென்ட்ரல் ஜெயிலில் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். காவலில் வைப்பதற்கு முன்னர், கருணாநிதிக்குமருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கருணாநிதி சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய மகள்கனிமொழியும் கருணாநிதியுடனேயே இருந்தார்.
ஜெயில் வாசலில் கருணாநிதி தர்ணா:
ஆனால், ஜெயிலுக்கு வந்ததும், கருணாநிதியை நேரடியாக ஜெயிலுக்கே கொண்டுசெல்ல போலீஸார் முயற்சித்தனர்.ஆனால், மருத்துவ சிகிச்சை என்னவாயிற்று என்று கருணாநிதி கேட்டிருக்கிறார்.
போலீஸாரோ, அதெல்லாம் கிடையாது என்று கூறி, அவரை ஜெயிலுக்குள் அழைத்துச் செல்ல முயன்றனர். உடனேகருணாநிதி ஜெயில் வாசலிலேயே கட்டியிருந்த கைலியுடன் கீழே உட்கார்ந்து, தர்ணா செய்ய ஆரம்பித்தார்.கனிமொழியும் அப்படியே கீழே தந்தையின் அருகில் உட்கார்ந்துவிட்டார்.
திமுக தொண்டர்கள் ஆவேசம்:
கருணாநிதி தர்ணா செய்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட திமுக தொண்டர்கள் ஜெயிலுக்கு வெளியே கடும்கொந்தளிப்புடன், கோஷம் போட ஆரம்பித்தனர். நிறைய தொண்டர்கள் தலையில் அடித்துக் கொண்டு அழஆரம்பித்தனர். இதையடுத்து, ஜெயில் வாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தானே ஜெயிலுக்குள் சென்ற கருணாநிதி:
ஜெயிலுக்கு வெளியே நிலைமை மிகவும் சீரியஸாக ஆனதைத் தொடர்ந்து, கருணாநிதி மீண்டும் எழுந்துஜெயிலுக்குள் செல்வதற்குச் சம்மதித்தார்.
ஆனால், இம்முறை போலீஸார் அவரை ஜெயிலுக்குள் இழுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை. தானாகவே மெதுவாகநடந்து சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குள் சென்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications