கருணாநிதியுடன் 20 நிருபர்களும் கைது
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, செய்தி சேகரிக்கச் சென்ற 20 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கருணாநிதி, அவருடைய வீட்டில் வைத்து போலீஸாரால் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு,கைது செய்யப்பட்டார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் சென்னையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பரபரப்படைந்தனர்.
ஏராளமான பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கருணாநிதி வீட்டுக்கும், சிபிசிஐடி அலுவலகத்திற்கும், போலீஸ்கமிஷனர் அலுவலகத்திற்கும் படையெடுக்க ஆரம்பித்தனர்.
பல இடங்களுக்கும் கருணாநிதியை அலைக்கழித்த போலீஸார், சிறிது நேரம் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனிலும் சிறிது நேரம்வைத்திருந்தனர். பின்னர் அவர் சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கு நள்ளிரவிலேயே அழைத்துச்செல்லப்பட்டார்.
பத்திரிக்கை நிருபர்களும் இந்த எல்லா இடங்களுக்கும் விடாமல் தொடர்ந்து சென்று, செய்திகள் சேகரிக்க முயன்றனர். அதனால்எரிச்சலடைந்த போலீஸார், 20 நிருபர்களைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
புழுத்த அரிசி புகார் தொடர்பாக, விழுப்புரம் அரசு அரிசிக் கிடங்கைச் சோதனையிடச் சென்ற முன்னாள் திமுக அமைச்சர்பொன்முடியுடன் சென்ற காரணத்திற்காக, விழுப்புரம் சன் டி.வி. நிருபர் சுரேஷ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகை உலகம் முழுவதுமே கொந்தளித்து எழுந்தது. சென்னையில் பத்திரிக்கையாளர்கள்அனைவரும் 2 நாட்களாகக் கடுமையாகப் போராட்டம் நடத்தினர்.
இதன் விளைவாக, முன்னணிப் பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள்வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இதைக் கண்ட பத்திரிக்கையாளர்கள் மேலும் பொங்கினர். மறியல்,ஆர்ப்பாட்டம் என்று போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
ஒரு வழியாக, வெள்ளிக்கிழமை மாலை சன் டி.வி. நிருபர் சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் நடந்த 12 மணி நேரங்களுக்குள்ளாகவே, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியை வெள்ளிக்கிழமைநள்ளிரவில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இதற்காகச் செய்தி சேகரிக்கச் சென்ற 20 பத்திரிக்கை நிருபர்களைத் தற்போது போலீஸ் கைது செய்திருப்பதால், பத்திரிகை உலகம்மீண்டும் கொதித்துப் போயிருக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications