போலீஸ் எச்சரிக்கை: சன் டிவியில் மக்கள் கருத்து ஒளிபரப்பு நிறுத்தம்
சென்னை:
கருணாநிதி கைது குறித்து மக்கள் கருத்துக்களை நிறுத்துமாறு சென்னை நகர போலீஸ்கமிஷனர் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சன் டிவியில் பொதுமக்கள் கருத்துக்கள்ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததது தொடர்பாக கருணாநிதிகைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்த மக்கள் கருத்துக்களை சன் டிவிஒளிபரப்பி வந்தது. பொதுமக்கள் பலரும் சன் டிவி அலுவலகத்தை தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்தனர். இது சன்டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இதை உடனடியாக நிறுத்துமாறும், இல்லாவிட்டால் சன்டிவியின் நிர்வாக இயக்குனர்கலாநிதி மாறன் கைது செய்யப்படுவார் என்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் கடிதம் மூலம் கலாநிதி மாறனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மக்கள் கருத்து கணிப்பு ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications