கருணாநிதியை மாறன் தான் தள்ளிவிட்டார்: டிஜிபி பேட்டி
சென்னை:
கருணாநிதியைக் கைது செய்யும் போது, அவர் முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதையைப் போலீஸார்கொடுத்தனர் என்று தமிழக போலீஸ் டிஜிபி ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது:
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு கருணாநிதி வீட்டுக்குச் சென்றனர் சிபிசிஐடி போலீஸார். அவர்களுக்கு உதவியாகசென்னை மாநகரப் போலீஸாரும் சென்றிருந்தனர். அங்கிருந்த உதவியாளரிடம் அனுமதி பெற்ற பின்னரே, கருணாநிதி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்று, அவரை எழுப்பியுள்ளனர்.
அவரும் எழுந்தவுடன், போலீஸாரிடம் வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். ஆனால் "உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாரண்ட் எல்லாம் தேவையில்லை" என்று கூறி, கருணாநிதியைக் கைது செய்ய முயன்றனர்.
அதற்குள் அங்கு வந்த முரசொலி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் வந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கருணாநிதியும் அவருடைய குடும்பத்தினரும் அப்படியும் இப்படியுமாக நேரத்தை இழுத்தடித்தனர். ஆனால்,அவரைக் கைது செய்யமட்டும் விடவில்லை.
போலீஸாருடன் வரமாட்டேன் என்று கருணாநிதியும் கூறினார். இதையடுத்து, தன்னுடைய மஞ்சள் துண்டைத் தோளில் இருந்துஎடுத்து அவரே கீழே போட்டுவிட்டு, தள்ளாடி விழ முயன்றார்.
அவர் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகவே போலீஸார் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். கருணாநிதியைமாறன்தான் கீழே தள்ளி விட்டார். அப்போதுதான் இவ்வளவு அமளியும் நடந்துவிட்டது.
இந்த அமளிக்கிடையில், சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியின் கண் அருகே தன்னுடைய விரல் மோதிரத்தால் குத்திக்கிழித்துள்ளார், மாறன். இதனால் அவருடைய கண்ணருகே காயம் ஏற்பட்டுள்ளது.
பெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான், சிபிசிஐடி போலீஸார் கருணாநிதியைக் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பிலிருந்துகருணாநிதிக்கு எத்தகைய மரியாதைக் குறைவும் தரவில்லை என்றார் ரவீந்திரநாத்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications