தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பதவி நீக்கம்
டெல்லி:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை வெள்ளிக்கிழமைபோலீசார் அடித்து இழுத்துச் சென்றது வாஜ்பாய் உள்பட நாட்டைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கைஅனுப்புமாறு தமிழக ஆளுனர் பாத்திமா பீவிக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்குஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிவரை கெடுவும் விதித்திருந்தார்.
இதையடுத்து பாத்திமா பீவி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முன் மத்தியஅரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.
ஜெயாவுக்கு ஆதரவான ஆளுநரின் அறிக்கை:
பாத்திமா பீவி தனது அறிக்கையில், ஜெயலலிதா அரசையும் தமிழக போலீசின்நடவடிக்கையையும் ஆதரித்திருந்தார். கருணாநிதியைக் கைது செய்யச் சென்றபோலீஸ் மீது மத்திய அமைச்சர்களான மாறனும், பாலுவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் தான் பிரச்சனை எழுந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சிறியசிறிய வன்முறைச் சம்பவங்கள் தான் நடந்துள்ளன எனவும் தனது அறிக்கையில்கூறியுள்ளார்.
நீக்க முடிவு:
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில்கூடிய மத்திய அமைச்சர ஆளுநர் பாத்திமா பீவியை உடனடியாக நீக்க முடிவுசெய்தது.
ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்கச் செய்யும் முன் தங்களுடன் பாத்திமா பீவிவிவாதிக்கவில்லை என்ற கடுப்பில் இருந்த மத்திய அரசிடம் ஆளுனர் இம்முறைவசமாக சிக்கிக் கொண்டார்.
தமிழக அரசு மற்றும் போலீசின் அடாவடிகளை ஆதரித்து அறிக்கை கொடுத்த அவரைஉடனடியாக நீக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications