பாத்திமா பீவி அறிக்கை மீது இன்று பிரதமர் தலைமையில் விவாதம்
சென்னை:
முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டது சம்பந்தமாக தமிழக ஆளுநர் அறிக்கை மீதான விவாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்மத்திய அமைச்சரவையின் கேபினட் கூட்டத்தில் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சிபிசிஐடி போலீஸாரால் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு, கைது செய்யப்பட்ட கருணாநிதி,சனிக்கிழமை காலை சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் பற்றி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இதைக் கண்டபொதுமக்களும் அரசியல் கட்சிகளும் அதிர்ச்சியில் மூழ்கின.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் பற்றி கண்டனஅறிக்கைகள் வெளியிட்டனர்.
மத்திய அரசும் இந்தக் கைதைக் கண்டித்துள்ளது. இதையடுத்து, இது சம்பந்தமாக ஒரு அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள்அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு, தமிழக ஆளுநர் பாத்திமா பீவியைக் கேட்டுக் கொண்டது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாகவே ஆளுநர் அறிக்கை டெல்லிக்குப் பறந்து விட்டது. மத்திய உள்துறைச்செயலாளர் கமல் பாண்டேவுக்கு இந்த அறிக்கை அனுப்பப் பட்டதாகவும், அவரும் அந்த அறிக்கையைப் பெற்று விட்டதாகவும்கூறப்படுகிறது.
இந்நிலையில், கருணாநிதி கைதான விவரம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. அப்போதே,இந்த ஆளுநர் அறிக்கையின் மீதான விவாதமும் நடைபெறும் என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கேட்டவுடன், தன்னுடைய அறிக்கையை அனுப்பி விட்டதன் மூலம், தன்னுடைய ஆளுநர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசுக்கோ, சிபிசிஐடி போலீஸ்அதிகாரிகளுக்கோ எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பது பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூற இயலாது.
ஆளுநர் அறிக்கையின் எதிரொலி எப்படி இருக்கும் என்பது பற்றி கேபினட் கூட்டம் முடிந்த பிறகுதான் தெரிய வரும். கேபினட் கூட்டத்தில்எப்படி முடிவெடுத்தாலும் சரி, 356ஐப் பிரயோகித்து தமிழக அரசைக் கலைக்க முடியாது என்றே நம்பப்படுகிறது.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications