ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க கோரிக்கை வலுக்கிறது
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என ஜார்ஜ் பெர்ணான்டஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆளுநர் பாத்திமா பீவியை நீக்குவதால் மட்டும் தமிழக பிரச்சனை தீர்ந்துவிடாது. இது தொடர்பாக மத்தியஅரசு மேலும் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து டெல்லி திரும்பியவுடன் பிரதமருடன்பேசுவேன் என்றார்.
ஜார்ஜ் பெர்ணான்டசின் இந்தப் பேச்சு மூலம் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க மத்திய அரசுமுடிவெடுக்குமோ என்ற பேச்சு வலுவடைந்துள்ளது.
ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாக மத்திய அரசு கருதினால் அந்த மாநில அரசைக் கலைக்கஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரைக்க முடியும்.
ஏற்கனவே, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தில் ஆட்சியைக்கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக பா.ஜ.கவும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியுள்ளது.
திமுகவும் ஜெயலலிதா ஆட்சியை கலைக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு:
ஆனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர காங்கிரசின் ஆதரவு மத்திய அரசுக்கு வேண்டும். ஒருமாநிலத்தில் ஆட்சியைக் கலைத்தால் அது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. அங்கு காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் தான் பலத்துடன் உள்ளன. எனவே, காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஆட்சிக் கலைப்புத் தீர்மானத்தைராஜ்யசபாவில் மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது.
காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் இது போன்ற தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது.எனவே, உடனடியாக அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க முடியாதநிலையில் மத்திய பாரதீய ஜனதா அரசு உள்ளது.
இருப்பினும் மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையில் சென்னை சென்றுள்ள அதிகாரிகள் குழுவும் தேசியஜனநாயகக் கூட்டணி சார்பில் சென்னை சென்றுள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான குழுவும் தரும் அறிக்கையின்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ட
இதற்காக வாஜ்பாய் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (திங்கள்கிழமை) கூடுகிறது. இதில் தமிழக அரசு மீதுஅடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications