குழந்தையுடன் தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
கோவை:
இரண்டு வயது பெண் குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயன்றவரைப் போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும்சனிக்கிழமை கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கோவையில் உணர்ச்சிவசப்பட்ட பல தொண்டர்கள், ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு, பஸ் மீது கல் வீச்சு, தீக்குளிப்பு எனபல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் 37வது வார்டு திமுக செயலாளராக இருந்து வருகிறார். இவர் சனிக்கிழமைகாலையில், திமுக தலைவர் கருணாநிதி செய்யப்பட்ட செய்தியை அறிந்து மனம் வேதனைப் பட்டார்.
தனது இரண்டு வயதுக் குழந்தைக்கு கறுப்பு சிவப்பு உடைகளை அணிவித்தார். பின்னர் அந்தக் குழந்தையை தனது பைக்கில் அமரவைத்தார். அத்துடன் மண்ணெண்ணெயையும் கேனில் எடுத்துக் கொண்டார். தனது பைக்கில் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்முன்பாக வந்தார்.
இந்த இடத்தில் சிக்னலுக்காக பஸ் லாரி மற்றும் வாகனங்கள் காத்திருந்தன. போலீஸ் ஸ்டேஷன் முன்பு வந்த முருகன், சிக்னலின்மத்தியில் வந்து மண்ணெண்ணெயை மடமடவென தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றினார். தீவைத்துக் கொள்ள தீப்பெட்டியை எடுத்தார்.
இதனைக் கண்ட டிராபிக் போலீஸ் வேகமாகச் சென்று தீப்பெட்டியை தட்டிப் பறித்தார். அதற்குள் மற்ற போலீசாரும் ஓடி வந்துபிடித்து முருகனைக் கைது செய்தனர். குழந்தையையும் தூக்கிச் சென்று காப்பாற்றினர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications