Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டார் கருணாநிதி: சொல்கிறார் ஜெயா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து பிரதமர் வாஜ்பாய்க்குவிரிவான அறிக்கை அனுப்புவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி கைது செய்யப்படும்போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்துத் தெரிந்து கொள்ளாமல் பிரதமர் வாஜ்பாய்கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி கைதான விவரம் குறித்துத் தெரிந்து கொள்வதற்காக பிரதமர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுயன்றதாகவும், ஆனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான தகவல். பிரதமர் வாஜ்பாய், தமிழக தலைமைச் செயலாளர் சங்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி, அவர் பேசிய விவரத்தை என்னிடம் கூறுமாறு கூறிவிட்டார்.

பிரதமர் என்னைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். அவரது தொலைபேசிக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை.

கருணாநிதிக்கு சிறப்பு சலுகை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவர் வகித்து வந்த பதவிக்கு மதிப்பளித்து அவர் அம்பாஸிடர் காரில்அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் ஒரு மருத்துவரும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் 1996 ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோது குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வேனிலேயேஅழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னுடன் வர எனது வழக்கறிஞர் கூட அனுமதிக்கப்படவில்லை.

கருணாநிதி தாக்கப்படவில்லை:

தமிழக போலீஸ் அதிகாரிகள் கருணாநிதி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்குச் சென்றனர். அவர்கள்கருணாநிதியின் வீட்டுக்கதவைத் தட்டியபோது அவர் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.

போலீஸார் அதிகாலை 4 மணி வரை அவர் வீட்டு வாசலில் காக்க வைக்கப்பட்டனர். அதன்பிறகுதான் அவர்கள் வீட்டுக்குள்அனுமதிக்கப்பட்டனர். கருணாநிதி முரண்டுபிடித்ததால்தான் அவரைப் போலீஸார் கையைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.அவரைப் போலீஸார் தாக்கவேயில்லை.

சட்டத்துக்கு புறம்பான செயல்:

கருணாநிதி கைது செய்யப்பட்டு அம்பாசிடர் காரில் அழைத்துச் செல்லப்பட்டபோது அவருடன் பரிதி இளம்வழுதியும், முரசொலிமாறனும் சென்றனர்.

சட்டப்படி, ஒரு குற்றவாளி அழைத்துச் செல்லப்படும்போது அவருடன் வேறு யாரும் செல்லக் கூடாது. ஆனால் அவர்களுடன்மாறனும், பரிதி இளம்வழுதியும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை காரை விட்டுக் கீழே இறங்கும்படி பலமுறை போலீஸார் கேட்டும் அவர்கள் கீழே இறங்காமல் பிடிவாதமாககாரிலேயே இருந்ததால் வலுக்கட்டாயமாக காரிலிருந்து அவர்கள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

இவர்கள் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்படவோ அல்லது தரக்குறைவாக நடத்தப்படவோ இல்லை.

சட்டம் தெரிந்தவர் கருணாநிதி:

தமிழகத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. போலீஸார் அவரைக் கைது செய்ய வந்திருந்தபோது அவர்ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும். அவர் முரண்டுபிடித்துக் கொண்டு சிறுபிள்ளைத்தனமாகவும், சண்டித்தனமாகவும் நடந்துகொண்டார்.

இதனால்தான் அவரை வேறுவழியின்றி போலீஸார் தூக்கிச் சென்றனர். சன் டிவியில் கருணாநிதி தாக்கப்பட்டதாக திரும்பத்திரும்பக் கூறி வருகிறார்கள்.

முரசொலி மாறனையும் போலீஸார் தாக்கவில்லை. அவர் நல்ல ஆரோக்கியமுடன்தான் காணப்படுகிறார். வேண்டுமென்றே அவர்அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+