அதிமுக பணிந்தது: மாறன், பாலு விரைவில் விடுதலை
டெல்லி:
மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள், கைது செய்யப்பட்டுள்ள 2 மத்திய அமைச்சர்கள்விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜேட்லியிடம் உறுதியளித்துள்ளனர்.
இதுகுறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் முடிவடைந்து, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும்விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி ஊழல் குற்றச்சாட்டு காரணமாகக் கைது செய்யப்பட்டார்.அப்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருணாநிதியைத் தவிர, 2 மத்திய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டது மத்திய அரசின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் டெல்லி சென்று, மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தனர்.
அப்போது, கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களை விடுவிக்க தேவையான அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும்எடுப்பதாக அ.தி.மு.க. அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
அவர்கள் ஜனாதிபதியையும் சந்தித்து, தமிழக அரசின் நிலைப்பாடு பற்றித் தெரிவிக்க உள்ளனர். ஜனாதிபதியைச் சந்திக்கப்போகும்போது, அ.தி.மு.கவைச் சேர்ந்த எம்.பிக்களும் இவர்களுடன் செல்கின்றனர். இவர்களை ஜனாதிபதி திங்கள்கிழமை மாலைசந்திக்கப் போகிறார்.
இந்நிலையில், கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, தமிழகத்தில் நேரடி ஆய்வை மேற்கொண்ட ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையிலான மூவர் குழு, அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதிஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications