கருணாநிதி கைது: அதிர்ச்சியில் 3 திமுகவினர் சாவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கருணாநிதி கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த 3 திமுக தொண்டர்கள் இறந்தனர்.

வால்பாறையைச் சேர்ந்த திமுக தொண்டர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

வால்பாறை வில்லோனி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சிங்கார வேலு (35). இவர் வெளியூர் சென்று விட்டு வால்பாறைக்குசனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு இடத்தில் பஸ் நின்றது. பஸ்சை விட்டு இறங்கி அவர் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பஸ் பயணிகள் சிலர் கருணாநிதி கைது பற்றி அனுதாபத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் வேதனையில்இருந்த அவருக்கு மேலும் வேதனை அதிகரித்தது. பஸ்சில் மீண்டும் ஏறிப் பயணம் செய்த அவருக்கு திடீரென மாரடைப்புஏற்பட்டது. இதையடுத்து அவர் இறந்தார்.

இதே போல், மாரடைப்பு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுன்சிலர் ஞானவேல் சிகிச்சைபலனின்றி ஞாயிறன்று இறந்தார்.

மேலும், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் கிட்டான், டி.வியில் தொடர்ந்து கருணாநிதியின் கைது பற்றிப்பார்த்துக் கொண்டே இருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இறந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+