தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவு
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தேசிய மனித உரிமைக்கமிஷன் தமிழக அரசுக்கும், தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கும் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், சன் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு, நாட்டையேஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக போலீஸ் கமிஷனரும் கருணாநிதி கைதுசம்பந்தப்பட்ட வேறொரு வீ"டியோ கேசட்டை நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்தப் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது, போலீஸார் கருணாநிதியைக் கைது செய்த நேரத்தில் மனித உரிமைகள்மீறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், ஒரு முன்னாள் முதல்வர் என்பதையும் நினைவில் கொள்ளாமல், தமிழக போலீஸாரும்கருணாநிதியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்றும் மனித உரிமை கமிஷன் கருதுகிறது.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அவருடைய வீட்டில் உள்ள பெண்கள் நடத்தப்பட்ட விதமும் மனித உரிமையைமீறும் விதமாகத்தான் உள்ளது என்றும் மனித உரிமை கமிஷனுக்கு நினைக்கத் தோன்றுகிறது.
எனவே, இந்த மனித உரிமை மீறல் குறித்து, தமிழக அரசும், தமிழக போலீஸ் டி.ஜி.பியும் உடனடியாக அறிக்கை அனுப்பவேண்டும் என்று தேசிய மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications