மத்திய சிறை வாசலில் திமுகவினர் வன்முறை: போலீஸார் தடியடி
சென்னை:
சென்னை மத்திய சிறைச்சாலைக்கு வெளியே திமுக தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் இறங்கியதைத்தொடர்ந்து, அவர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர்.
சிறையில் இருக்கும் கருணாநிதியைச் சந்திப்பதற்காக, தெலுங்கு தேச எம்.பியான எர்றன் நாயுடு சென்னை மத்திய சிறைக்குவந்தார். ஆனால் அவரைப் போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து சிறைக்கு வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் கோபமைடந்து பயங்கர வன்முறையில் இறங்கினர். சிறைவாசலில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் மீது, அவர்கள் கற்களை எறிய ஆரம்பித்தனர்.
இதையடுத்து, திமுக தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், அவர்கள் அனைவரும் கலைந்து ஓடினர். பின்னர்அந்த வழியே சென்ற பஸ்கள் மீது கல்வீச்சில் இறங்கினர். இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.
அதில் பயணம் செய்த பயணிகள் பஸ்களில் இருந்து இறங்கி சிதறி ஓடினர்.
இதற்கிடையே, எர்றா நாயுடுவைச் சிறைக்குள் செல்வதற்குப் போலீஸார் அனுமதித்தனர். அவரும் உள்ளே சென்று,கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு ஆளுநரைத் திரும்ப அழைத்தை நாங்கள் வரவேற்கிறோம்.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பதைப் பற்றி மத்திய அரசு தான் முடிவெடுக்கும்" என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications