வாஜ்பாய் தலைமையில் திடீர் தே.ஜ. கூட்டணிக் கூட்டம்
டெல்லி:
டெல்லியில் திங்கள்கிழமை மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம்திடீரென கூட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வாஜ்பாயின் தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை பதவி நீக்கம் முடிவு செய்யப்பட்டது.அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
திங்கள்கிழமை மீண்டும் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடி தமிழக நிலை குறித்தும்,மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இருந்தது.
ஆனால், சில காரணங்களால் இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக நிலை குறித்து நேரில் ஆராய்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக் குழுவின்தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார். அதில்அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. அங்கு ஜெயலலிதாஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இந்த அறிக்கை குறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிகட்சிகளின் கூட்டம் திடீரென கூட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அரசியல் சட்டத்தின் 355வது பிரிவை அமல்படுத்துவதாஅல்லது அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதாஎன்பது குறித்து விவாதிக்கப்படும்.
தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க பெர்ணான்டசின் சமதா கட்சியும் திமுகவும் மட்டுமேகோருகின்றன. ஆனால் இதற்கு தெலுங்கு தேசம், அகாலிதளம் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
இதனால் தமிழகத்தில் அரசியல் சட்டத்தின் 355வது பிரிவை அமல்படுத்தி மாநிலஅரசை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.இந்தப் பிரிவு அமல்படுத்தப்பட்டால், தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படமுடியாது. எல்லா செயல்களுக்கும் தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதல் பெறவேண்டும்.
திடீரென கூட்டப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கட்சி கூட்டம் முடிந்த பின் அந்தகூட்டத்தின் முடிவுகள் தெரியவரும். செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் மத்தியஅமைச்சரவை கூட்டத்திலும் தமிழக நிலைமை விவாதிக்கப்படும். அதன் பின் இறுதிமுடிவு எடுக்கப்படும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications