என் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, தான் ஜாமீன் கோரப்போவதில்லலை என்றும், ஆனால்தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கருணாநிதியை ஜாமீனில் விடுவிக்க கோரி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல்செய்யப்பட இருந்தது.
ஆனால், கருணாநிதியோ "அதிமுக அரசு என் மீது தொடர்ந்துள்ள வழக்குகளைச் சந்திக்க நான் தயாராகஇருக்கிறேன். எனக்காக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டாம்" என்று திங்கள்கிழமை கூறியிருந்தார்.
தற்போது அவர் மேலும் ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. "என் மீது போடப்பட்டுள்ளவழக்குகள் பொய்யானவை. முதலில் அவற்றை வாபஸ் பெற வேண்டும்" என்று கருணாநிதி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications