தமிழகம் முழுவதும் 14,000 திமுக தொண்டர்கள் விடுதலை
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடந்த முழுஅடைப்பையொட்டிக் கைது செய்யப்பட்ட திமுக தொண்டர்களில் இதுவரை 14,000 தொண்டர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திங்கள்கிழமை முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தது.
இதையடுத்து, சென்னை, மதுரை, கோவை, சேலம், தூத்துக்குடி உள்பட பல முக்கிய நகரங்களில் திமுகதொண்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பந்த் முடிவடைந்ததையொட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகதொண்டர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முதல்கட்டமாக, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 3,000 திமுகதொண்டர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 14,000 திமுக தொண்டர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications