தமிழக ஆளுநராக பதவியேற்றார் ரங்கராஜன்
சென்னை:
தமிழக ஆளுநராக செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்குப் பதவி ஏற்றுக் கொண்டார் டாக்டர் சி. ரங்கராஜன்.
ஆந்திர மாநில ஆளுநராக இருந்து வரும் டாக்டர் ரங்கராஜன், தற்போது தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ராஜ்பவனில் நடந்த ஒரு எளிய நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின், டாக்டர்ரங்கராஜனுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், சட்டசபை சபாநாயகர் காளிமுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்மற்றும் உயர் அதிகாரிகள் இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தமிழக ஆளுநராகக் கூடுதல்பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் ரங்கராஜன்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்த டாக்டர் ரங்கராஜனை சபாநாயகர் காளிமுத்து, அதிமுக அமைச்சர்கள்விமான நிலையத்திற்குச் சென்று, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
ஆந்திர மாநில ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார் டாக்டர் ரங்கராஜன்.
சிறந்த பொருளாதார நிபுணரான இவர், இதற்கு முன்பே 2 முறை தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை வகித்துள்ளார். பாத்திமாபீவி 1997ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தமிழக ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன்பும், பாத்திமா பீவி சமீபத்தில் ஹஜ் யாத்திரைசென்ற போதும், டாக்டர் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications