ஆட்சி கலைந்துவிடும் அச்சத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து சாவு
சென்னை:
அதிமுக அரசைக் கலைத்து விடுவார்களோ என்ற பயத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
இந்தப் பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கே.கே. நகரை சேர்ந்த மணி-புஷ்பா தம்பதியரின் மகன் பாண்டியன். இவர்அதிமுக பிரமுகர்.
திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டசம்பவம் குறித்து முறையான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என்ற காரணத்தால் கவர்னர்பாத்திமா பீவியை பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது.
மேலும் கருணாநிதியை கைது செய்து முறை சரியல்ல என்றும், அதிமுக அரசைக் கலைக்கக் கோரியும் திமுகவினர்மத்திய அரசிடம் வற்புறுத்தி வந்தனர்.
இதைத் தொலைக்காட்சியில் பார்த்த பாண்டியன் மனவருத்தம் அடைந்தார். முதலில் கவர்னரை நீக்கினார்கள். அதேபோல் அதிமுக அரசையும் நீக்கி விடுவார்களோ என்று பயந்த பாண்டியன் தற்கொலை செய்து கொள்வது எனமுடிவெடுத்தார்.
இதையடுத்து, வீட்டில் தன்னுடைய அறைக்குச் சென்ற அவர், தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து அந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது.
வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புப் போலீஸாருக்குத் தகவல்கொடுத்தனர். தீ அணைக்கும் படையினர் விரைந்து வந்து, கடும்போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.
அப்போது பாண்டியன் அந்த அறைக்குள் கருகிய நிலையில் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications