கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: தயாளு அம்மாள் வேதனை
சென்னை:
கருணாநிதிக்கு நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவை கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பழச்சாறைகூட கொடுக்க அனுமதிக்கவில்லை என கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வருத்தத்துடன் கூறினார்.
மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க.தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மகள் அன்புக்கரசி, பேத்திஎழிலரசி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சென்று பார்த்தனர்.
அதன் பின் வெளியே. வந்த தயாளு அம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், சக்கர நாற்காலியில் உட்கார வைத்துஅவரை அழைத்து வந்தனர். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
அவருக்கு சிறையில் கொடுக்கும் உணவு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் சோர்வாக இருக்கிறார்.நாங்கள் அவருக்கு கொடுப்பதற்காக வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்றிருந்தோம்.
ஆனால் அதை அவருக்கு கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பழச்சாறு கொடுக்கவும் சிறைஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எங்கள் குடும்ப டாக்டரை அனுப்பி அவரை பரிசோதனை செய்ய முன்னர் சிறை அதிகாரிகள் அனுமதிப்பதாககூறினர். ஆனால் அவர்கள் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அவர் எங்களிடம் மிகவும் சோர்வாக இருக்கிறது. தோள்பட்டை அதிகமாக வலிக்கிறது என்றார்.
நாங்கள் அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்யட்டுமா என்று கேட்டோம். அவர் அதற்கு மறுப்புதெரிவித்துவிட்டார். நாங்களும் அவரை மேலும் வற்புறுத்தவில்லை.
தமிழக சிறைகளில் இருக்கும் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டதை அவரிடம் தெரிவித்தேன் என்றார்தயாளு அம்மாள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications