தொண்டனைப்போல் சிறையில் இருக்க ஆசை: கருணாநிதி
சென்னை:
தமிழகம் முழுவதும் 32,000 தொண்டர்கள் சிறையில் வாடும்போது நானும் தொண்டனைப்போல் சிறையில்இருக்கவே விரும்புகிறேன் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமைநள்ளிரவு கருணாநிதியை சிபிசிஐடி போலீஸார் அடித்து, இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியைப் பார்ப்பதற்காக தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்,விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன், பேராசிரியர் தீரன் ஆகியோர் சிறைக்குச் சென்றுகருணாநிதியைப் பார்த்தனர்.
இவர்கள் மூவரும் சிறைக்குள் சென்று கருணாநிதியைப் பார்த்து விட்டு திரும்பினர். சிறை வாசலில் திருமாவளவன்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கருணாநிதி மிகவும் களைப்பாகக் காணப்படுகிறார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரைமருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு கூறினோம்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், "என்னுடைய உடன்பிறப்புக்கள் 32, 000 பேர் சிறையில் வாடுகின்றனர்.அவர்களுக்கு உண்ண உணவில்லை. அவர்களைத் தவிக்கவிட்டுவிட்டு நான் மட்டும் மருத்துவமனைக்குச் சென்றுசலுகை பெறுவது நல்லதல்ல.
சிறையில் இருக்க விருப்பம்:
நான் சாதாரண தொண்டனைப்போல் சிறையில் இருக்கவே விரும்புகிறேன்.
என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போவதே போலீஸாரின் நோக்கமாக இருந்துள்ளது. சிபிசிஐடிஅலுவலகத்துக்கு என்னைக் கொண்டு சென்ற போது எனக்கு சுயநினைவே இல்லை.
திமுக ஆட்சியில் மற்ற அரசுத் துறை ஊழியர்களை விட போலீஸாருக்கே அதிக அளவு சலுகைகள் செய்துகொடுத்தேன். ஆனால் அவர்கள் கொஞ்சம்கூட நன்றியில்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்.
மாறனைத் தாக்கினர்:
முரசொலி மாறனின் மார்பில் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட இடத்தில் போலீஸார் அடித்தனர். இதைப்பார்த்த நான்அவரது உடல்தான் திரும்பி வரும் என்று நினைத்தேன்.
சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தால் அவர்கள் மேயரை அல்லவா கைதுசெய்திருக்க வேண்டும்? அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?" என்று கருணாநிதி என்னிடம் கூறினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்து 45 நாட்கள்தான் நிறைவடைகிறது. அதற்குள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குசீர்குலைந்துள்ளது. பல உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் 356வது பிரிவை அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் திருமாவளவன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications