நம்பியாரை விடுவிக்க ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைமை செயலாளர் நம்பியாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றுஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சமதா கட்சித் தலைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ்பெர்னாண்டஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைமை செயலாளர்நம்பியார் மற்றும் மத்திய அரசின் முன்னாள் ஆலோசகரும், தற்போதைய மாநகராட்சி என்ஜினியருமானசீனிவாசனையும் போலீஸார் விடுதலை செய்ய வேண்டும்.

கருணாநிதி ஆட்சியில் இருந்த போது இவர்களும் இருந்தார்கள் என்ற காரணத்தால் இவர்களைக் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.

சீனிவாசன் ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுநர். பல ஆண்டுகளாக திட்டக்குழு பதவி வகித்தவர். தமிழகம்,கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பணியாற்றியவர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தபோதே ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளையும் சிறையில் அடைப்பார் என்று எதிர்பார்த்தேன். அதே போல் நேர்மையான நம்பியாரும்,சீனிவாசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நம்பியார் பாதுகாப்புத் துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் யாரும்கூறியது கிடையாது. அப்பழுக்கற்ற அதிகாரி அவர். சீனிவாசன் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர். அவர்அடைக்கப்பட்டுள்ள சிறையில் மின் விசிறி கூட இல்லை.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல. திறமை வாய்ந்த இவர்கள்இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். ரகசியமாக தீய நோக்கத்துடன் நேர்மையான அதிகாரிகளைஇதுபோன்று சிறையில் அடைப்பது தடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+