இலங்கை: பேச்சுவார்த்தைக்கு புதிய நார்வே தூதுக் குழு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிமேற்கொள்வதற்காக புதிய நார்வே தூதுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நார்வேயின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ரேமான்ட் ஜொஹான்சென் தலைமையிலான 4 பேர் கொண்டகுழு இலங்கை அரசு-விடுதலைப் புலிகள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியைைமேற்கொள்ளும் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்படுத்த நார்வே தூதர்எரிக் சோல்ஹேம் முயன்று வந்தார். ஆனால், இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும், தங்கள்மீதான தடையை நீக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விடுதலை புலிகள் விதித்தனர். ஆனால் இதை இலங்கைஅரசு ஏற்காததால் அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், நார்வேயின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ரேமான்ட் ஜொஹான்சன் தலைமையிலான புதியதூதுக்குழு அமைதிப் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபடும் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேமான்ட் ஜொஹான்சன் தவிர, இலங்கைக்கான நார்வே தூதர் ஜான் வெஸ்ட் போர்க், முன்னாள் நார்வே குழுதலைவர் எரிக் சோல்ஹேம், கிஜெர்ஸ்டி ட்ராம்ஸ்டால் ஆகியோர் இந்த தூதுக்குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், நார்வே தூதுக்குழு அமைதிப்பேச்சுக்கானமுயற்சியில் ஈடுபடுவதை இலங்கை விரும்புகிறது. அவர்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்அமைதிப் பேச்சு நடப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைதீர்க்க நினைக்கிறோம். விடுதலை புலிகள் எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தைக்குமுன் வரவேண்டும் என்றார்.

சென்ற மாதம் நார்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோப்ஜோர்ன் ஜாக்லான்ட், இலங்கை அதிபரைச் சந்திக்கவந்தார். அப்போது இலங்கை அதிபர் சந்திரிகா குமார துங்கா, லட்சுமண் கதிர்காமர் ஆகியோருடன்பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நார்வே தூதுக்குழு தலைவராக இருந்த எரிக்சோல்ஹேம் இதில்பங்கேற்கவில்லை. அப்போதே அவர் ஒதுக்கப்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்தது.

கடந்த மாதம் 7ம் தேதி நார்வே அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபடும் என இலங்கை அரசுகூறியது, தூதுக்குழு தலைவராக சோல்ஹேம்தொடர்ந்து இருக்கமாட்டார் என்பதை எடுத்துக் கூறும் விதமாகஅமைந்தது.

எரிக் சோல்ஹேம், நார்வே தூதுக்குழு பதவியிலிருந்து நீக்கப்படுவதை விடுதலை புலிகள் கடுமையாகஎதிர்த்துள்ளனர். இது அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பங்கம் விளைவிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். தற்போதுஇலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கலாமா என்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறது.

புதிய தலைமையில் வரும் நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சு வார்த்தை முயற்சியில் வெற்றி பெறுமா என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+