ஆஸ்திரேலியா: ஹிப்னாடிச கொள்ளையடித்த இந்தியர்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கடைகளில் ஹிப்னாடிசம் செய்து பணத்தை கொள்ளையடித்ததாக சென்ற மாதம்கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு இந்தியர்.
ஆனால் அவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
அவரைப் பற்றி போலீஸாருக்குத் தெரிந்ததெல்லாம், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், 26 வயதாகும்அவர் டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வந்தவர் என்பதும்தான்.
இந்த இந்தியர் பல கடைகளுக்கும் சென்று கடை முதலாளிகளிடமும், பணிபுரிவோரிடமும் பேசி அவர்களைஹிப்னானிடிசம் செய்து அவர்களிடம் உள்ள பணத்தைத் தன்னிடம் கொடுக்க வைப்பார். அதன் பின் பணத்துடன்தலைமறைவாகி விடுவார்.
இவரது ஹிப்னாடிசத்தில் மயங்கி பணத்தை பறி கொடுத்த கவுசர் ஜமால் என்ற பெண், "இவர் என்னிடம் எனதுஎதிர்காலம் பற்றி ஜோசியம் சொல்வதாகக் கூறினார். பின்னர் என்னை மயக்கி என்னிடமிருந்த 100 ஆஸ்திரேலியடாலர்களை வாங்கிக் கொண்டார். அவர் என்னை மயக்கிய காரணத்தால்தான் அவர் கேட்டவுடன் நான் பணத்தைகொடுத்துவிட்டேன்" என்றார்.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. நீண்ட நாள் தேடுதலுக்கு பின் அவரை போலீஸார் அவரைக்கண்டுபிடித்து, கைது செய்தனர். ஆனாலும் அவர் மீது எந்த விதமான வழக்கு தொடுப்பது என போலீசார்குழப்பத்தில் உள்ளனர்.
இவர் ஹிப்னாடிசம் மூலம் பணத்தை கொள்ளையடித்துள்ளதால், இவர் சட்டத்தில் எந்த பிரிவை மீறி குற்றம்செய்திருக்கிறார், எந்த பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு தொடர்வது என தெரியாமல் போலீசார் திணறிப்போயுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications