பழி வாங்கல்: கடும் கோபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
சென்னை:
ஆட்சிகள் மாறும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குகள் போடப்பட்டு வருவற்கு அதிகாரிகள் மட்டத்தில்கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக வரும் 20ம் தேதி நடக்கவுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கக் கூட்டத்தில் விவாதிக்கவும் அவர்கள்முடிவு செய்துள்ளனர்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அன்றையதலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் உள்பட பல அதிகாரிகள் மீது வழக்குகள் போடப்பட்டன. அவர்கள்சிறையிலும் தள்ளப்பட்டனர்.
அதே போல இப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் தலைமைச் செயலாளர்களாக இருந்தநம்பியார் மற்றும் முத்துசாமி உள்பட பல புகழ் பெற்ற, நேர்மையான அதிகாரிகள் மீது வழக்குகள்போடப்பட்டுள்ளன.
இதில் நம்பியாரை, கருணாநிதியைக் கைது செய்த அதே நாள் இரவில் அவரது வீட்டில் கைது செய்து சென்னைமத்திய சிறைக்கு அவரை வேஷ்டியோடு இழுத்து வந்தனர்.
இதனால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆட்சியாளர்கள் சொல்வதால் தான் நாங்கள்கையெழுத்திடுகிறோம். சில பிரச்சனையான திட்டங்கள், முடிவுகள் எடுக்கப்படும்போது ஆட்சியாளர்களுக்குபணிந்து கையெழுத்து போடாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது. தூக்கி அடிப்பார்கள். வேலையே இல்லாமல்கூட வைத்திருப்பார்கள்.
கையெழுத்து போட்டுவிட்டால், அடுத்த ஆட்சிக்கு வருபவர்களிடம் சிக்கி அலைகழிக்கப்படுகிறோம் எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது குறித்து குரல் எழுப்பவும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
கடும் அதிருபித்தியில் உள்ள பல அதிகாரிகள் தலைமைச் செயலாளர் சங்கரை சந்தித்து தங்களது மனக் குமுறலைவெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறிய புகார்களை அமைதியாகக் கேட்ட தலைமைச் செயலாளர் முதல்வரிடம்பேசுவதாக உறுதியளித்துள்ளார்.
அதே போல பல அதிகாரிகள் உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தாவையும் சந்தித்து கோபத்தைவெளிப்படுத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியவில்லை. ஆனால், அதிகாரிகள்பழிவாங்கப்பட மாட்டார்கள் என உறுதியளித்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications