அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகல்
சென்னை:
அதிமுக கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெள்ளிக்கிழமை விலகியது.
சில நாட்களாவே ஜெயலலிதாவுடன் மனஸ்தாபத்தில் இருந்த ராமதாஸ் தனது விலகல் அறிவிப்பை திடீரென்றுஅறிவித்தார்.
விரைவில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும்கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தனக்கு அவமானம் ஏற்பட்டதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
கருணாநிதியை சிறையில் சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸ் அதிமுகவின் செயல்களை வன்மையாககண்டித்தார். அப்போதே ராமதாஸ் பெரிய அறிவிப்பை விரைவில் வெளியிடப் போகிறார் என்பதை உணரமுடிந்தது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியுடன் கூட்டணி என்பதை விதிமுறையாகவே வைத்திருக்கிறாரோ எனக் கருதும்அளவுக்கு பல்டி அடித்து வருபவர் ராமதாஸ்.
விலகலுக்கு காரணம் என்ன?
ராஜ்யசபாவுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் தனது மகன் அன்புமணியை மாநிலங்களவை எம்.பியாக்கதிட்டமிட்டிருந்தார் ராமதாஸ். தன்னிடம் 20 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவு இருந்தால்மட்டுமே அன்பு மணியை எம்.பியாக்க ராமதாசால் முடியும்.
ஆனால், மத்திய அரசை எப்போதுமே மிரட்டலில் வைத்திருக்க விரும்பும் ஜெயலலிதா அதிமுகவினரையேஎம்.பிக்களாக்க திட்டமிட்டுள்ளார். பிற கட்சிக்கு எம்.பி. பதவியை விட்டுத் தர அவர் தயாராக இல்லை.
இதையடுத்து ஜெயலலிதா மீது அரசல் புரசலாக புகார் கூறி வந்த ராமதாஸ் இப்போது அதிமுகவிலிருந்துவிலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவிடம் இருந்து விலக நேரம் பார்த்துக் கொண்டிருந்த ராமதாசுக்கு கருணாநிதி கைது லட்டு போல கைக்குவந்தது.
பேட்டி:
முன்னதாக நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில், பிரதமரைக் கூட எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடிகிறது.ஆனால், ஜெயலலிதாவை சந்திக்கவே முடிவதில்லை. தொலைபேசியில் கூட பேச முடியவில்லை.
கருணாநிதியை கைது செய்ததையும் கைது செய்யப்பட்ட விதத்தையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
ஜெயலலிதா முதல்வாரவதற்கு முக்கிய காரணமே பாட்டாளி மக்கள் கட்சி தான். எனவே, எங்களுக்கு அதிமுகநன்றிக் கடன் பட்டிருக்கிறது.
ஆனால், தன்மானத்தை விட்டுத்தந்து எம்.பி. பதவியைப் பெற பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை என்றார்ராமதாஸ்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications