மனோஜ் பிரபாகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
டேராடூன்:
நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் அளவிற்கு பொது மக்கள்பணத்தை மோசடி செய்யததாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட்வீரர் மனோஜ் பிரபாகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏபேஸ் என்ற நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு, அங்கு முதலீடுசெய்யப்பட்ட பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்யததாக இந்தியாவின்முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரை உத்தராஞ்சல் மாநில போலீசார் தேடி வந்தனர். அவர்ஜெய்ப்பூரில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதால் அங்கு போலீசார் தேடி சென்றனர்.ஆனால் அவர் அங்கு இல்லை.
அதன் பின் உத்தராஞ்சல் போலீசார் டெல்லி போலீசார் உதவியை நாடினர். மனோஜ்பிரபாகர் வீடு டெல்லியில் இருப்பதால் அவரை கண்டு பிடித்து கைது செய்ய உதவுமாறுடெல்லி போலீசின் உதவி நாடப்பட்டது. ஆனால் மனோஜ் பிரபாகர் டெல்லியிலும்சிக்கவில்லை.
சில தினங்களுக்கு முன் மனோஜ் பிரபாகர் உத்தராஞ்சல் வந்து தான் நிரபராதி, தனக்கும்ஏபேஸ் நிறுவனத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும், தானே அந்தநிறுவனத்தில் ரூ. 25 லட்சம் மூதலீடு செய்திருப்பதாகவும், அதை எவ்வாறு திரும்பப்பெறுவது என யோசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை மனோஜ் பிரபாகரைத் தேடி வந்த ஹால்ட்வானி போலீசார்அவரை டெல்லியில் கைது செய்தனர். பின்னர் அவரை ஹால்ட்வானி கொண்டுசென்றனர். அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியதால் அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மனோஜ் பிரபாகர் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என ஹால்ட்வானி நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு ஹால்ட்வானி கீழ் நீதமன்றத்தாலும்,நைனிடால் நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது.
உத்தராஞ்சலின் துணை டி.ஜி.பி. அனில் கே. ரதூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரபாகரை ஜாமீனில் விட வேண்டும் என அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தார். இவை கீழ் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்த மாதம் 13ம் தேதி ஜாமீன் மனு மீதான மறு விசாரணை நைனிடால்மாவட்டநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபாகரின் உடல் நிலைசீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் கிருஷ்ணா மருத்துவமனைமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்மனோஜ் பிரபாகருக்கு 5 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாடக்கூடாது எனதண்டனை விதித்தது நினைவுகூற தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications