மத்திய அமைச்சர் என்றாலும் கைது தான்: ம.பி. முதல்வர்
போபால்:
மத்திய அமைச்சர்களாகவே இருந்தாலும் கூட சட்டத்தை மீறினால் கைது செய்வதில் தவறில்லை என மத்தியப்பிரதேச முதல்வர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
என்னை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என மத்திய விளையாட்டுத்துளை அமைச்சர் உமா பாரதி சவால்விட்டிருப்பது குறித்து திக்விஜய்யிடம் நிருபர்கள் கேட்டனர்,
சமீபத்தில் இந்து தீவிரவாத அமைப்பான பஞ்ரங் தள்ளில் சேர்ந்துள்ள உமா பாரதி இப்படி சவால் விட்டிருப்பதாகக்கூறுகிறீர்கள், அவர் எனது மாநிலத்தில் வந்து சட்டத்தை மீறிப் பார்க்கட்டும் அப்புறம் தெரியும் நான் யார் என்பதுஎன்றார்.
சட்டத்தை மீறினால் நிச்சயம் அவரை கைது செய்வேன். எனக்கு காங்கிரசின் மதசார்பின்மை கொள்கையைநிறைவேற்றுவது தான் முதல் வேலை. இங்கு வந்து உமா பாரதி மதரீதியில் வாலாட்டினால் நான் யார் என்பதைக்காட்டுவேன், அவர் மத்திய அமைச்சராக இருந்தாலும் சரி, நிச்சயம் ஜெயிலுக்குள் தள்ளுவேன்.
யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான் என்றார் திக்விஜய் சிங்.
ஆனால், கருணாநிதியின் வயதைக் கருதி அவரிடம் ஜெயலலிதா கொஞ்சம் நிதானமாக நடந்திருக்க வேண்டும்என்றார் சிங்.
திக்விஜய்யுடன் உமா பாரதி மோதுவது இது முதல்முறையல்ல. வெட்டி சவடால்கள் விடுவதில் கைதேர்ந்தவர் உமாபாரதி. முன்பு ஒரு முறை போபாலில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாகதிக்விஜய்யுடன் மோதி மூக்கு உடைபட்டார்.
சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்துவிட்டு பசி எடுத்ததும் அதை கைவிட்டார். இவரது அடாவடி ஸ்டைலைவாஜ்பாய் கூட விரும்புவதில்லை. ஒரு முறை மாநில அரசுடன் சண்டை போட்டுவிட்டு மத்திய அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார். அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார் வாஜ்பாய்.
அரசியலைவிட்டு விலகுவதாக ஒருமுறை அறிவித்துவிட்டு சில வாரங்களில் மீண்டும் மத்திய அமைச்சர் பதவியைக்கேட்டுப் பெற்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications