தடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் தம்பிதுரை
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை, போலீஸார் அனிமேஷன் செய்து மாற்றியுள்ளனர் என்றுகூறியுள்ள தடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை போலீஸார் எடிட்செய்து, அனிமேஷன் மூலமாக, சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியை முரசொலி மாறன் அடிப்பது போன்றகாட்சியை அமைத்துள்ளனர் என்று தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இது அப்பட்டமான பொய். இவருடைய இந்தக் கருத்து உள்நோக்கமுடையது.
முன்பொரு முறை, ஒரு கொலை வழக்கில், மண்டையோடு ஒன்றை ஆராய்ந்த டாக்டர் சந்திரசேகர"ன்,பாண்டியம்மாள் என்ற பெண்ணுடைய மண்டையோடுதான் என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால், அந்த பாண்டியம்மாள் நேரடியாக உயிருடன் கோர்ட்டில் வந்து நின்றதை அனைவரும் அறிவார்கள்.டாக்டர் சந்திரசேகரன் தடவியலில் எவ்வளவு சிறப்பு மிக்கவர் (?) என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடுதான், டாக்டர் சந்திரசேகர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். முந்தைய அதிமுகஆட்சிக் காலத்தில், அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்காத காரணத்தால், தேவையில்லாமல் இப்போது இத்தகையஅறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இது அவருக்குத் தேவையில்லாத வீண் வேலை. அவர், தன் தொழிலையே கேவலப் படுத்திக் கொண்டிருக்கிறார்.இதற்காக, டாக்டர் சந்திரசேகரன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்றார் தம்பிதுரை.
யு.என்.ஐ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications