ராஜ்யசபை எம்.பி. பதவி: 4 இடங்களில் அதிமுக போட்டி
சென்னை:
வரும் ராஜ்யசபா தேர்தலில், அதிமுக 4 இடங்களிலும் தமாகா 1 இடத்திலும் போட்டியிடும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
திங்கள்கிழமை காலை நடந்த அதிமுக கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜூலை 23ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள 6 ராஜ்யசபாஎம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, இந்த 6 சீட்டுகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த சட்டசபை தேர்தல் முடிவடைந்தது முதல், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த பாமக, ஒரு ராஜ்யசபாசீட்டுக்காகப் போராடி வந்தது. ஆனால், சீட் கிடைக்காது என்று தெரிந்தவுடன், கடந்த 3 நாட்களுக்கு முன், அந்தக்கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகி விட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய அதிமுக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் ஜெயலலிதா தலைமையில் கூடியது.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், எஸ.ஆர்.பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் மாநிலக் தலைவர் இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரங்கராஜன், தேசிய முஸ்லீம் லீக் சார்பில்அப்துல் லத்தீப் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பா.ம.க. விலகிய பிறகு நடக்கும் முதல் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இது தான். இதில் ராமதாசின் பல்டிகுறித்தும் விவாதிக்கப்பட்டது. அதே போல கருணாநிதி கைது விவகாரத்தில் மத்திய அரசு அனுப்பியுள்ளஎச்சரிக்கை, அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கருணாநிதி கைது விவகாரத்தில் மத்திய அரசு கடும் நெருக்குதல் கொடுத்தபோது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்தனக்கு ஆதரவாக இருந்ததற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ராஜ்யசபாவுக்கு நடக்கும் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 4 சீட்டுகள் அதிமுகவுக்கும், ஒரு சீட்தமாகாவுக்கும் ஒதுக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications