ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின்
சென்னை:
நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள சென்னை மேயர் ஸ்டாலின் நிபந்னைப்படி சென்னை செசன்ஸ்நிதிமன்றதில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
மேம்பால ஊழல் வழக்கில், கடந்த ஜூன் 30ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலின்,கடந்த ஜூலை 7ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை விடுதலை செய்த நீதிபதி ஒவவொரு திங்கள்கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போடவேண்டும் என ஆணையிட்டார். இதையடுத்து இன்று ஸ்டாலின் சைதாப்பேட்டை செசன்ஸ் நீதிமன்றம் வந்தார்.நீதிபதி அசோக் குமார் முன் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பினார்.
ஸ்டாலின் தவிர முன்னாள் அமைச்சர்கள் கோ.சி. மணி, பொன்முடி, முன்னாள் தலைமைச் செயலாளர் நம்பியார்,பொறியாளர் சேதுராமன் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
வெளியே வந்த ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் ஸ்டாலின் கூறுகையில்,
மாநகராட்சி சரியாகச் செயல்படாததால், அதை ஏன் கலைக்கக் கூடாது என்று தமிழக அரசு நோட்டீஸ்அனுப்பியுள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி நடைபெறவிருக்கும் மாநகராட்சிக் கூட்டத்தில் இதுபற்றிமுடிவெடுக்கப்படும். பின்னர் அது குறித்து, தமிழக அரசுக்கு முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். தற்போதைய அதிமுக ஆட்சி ஒருகொடுங்கோல் ஆட்சி, ஹிட்லர் ஆட்சி, கொடுமையாளர்களின் ஆட்சி. இந்த ஆட்சியில் எதுவும் நடக்கலாம்.நடக்காமலும் போகலாம்.
என் மீதும் கருணாநிதி மீதும் போடப்பட்டுள்ள மேம்பால ஊழல் வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதை நீதிபதியேகூறிவிட்டார். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications