For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் பல்கலை. தற்காலிக ஊழியர்கள் வேலைக்கு உலை?

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 70 தற்காலிக பணியாளர்கள்பணியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

சென்ற 1997ம் ஆண்டு, சேலத்தில் பெரியார் பல்கலைகழகம் துவக்கப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்தவீரபாண்டி ஆறுமுகம், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தின் காலி இடங்களை நிரப்பினார்.தற்காலிகப் பணியாளர்களாக 70க்கும் அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டனர்.

கேள்வித்தாள் மாடல் தயாரிப்பது, மாணவர்களுக்கான தேர்வு தேதி குறிப்பது, இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல்சூபர்வைசிங்குக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வது, பறக்கும் படைக்கு பணி இட அட்டவணை தயாரிப்பது,கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட பல்கலைக்கழகப் பணிகளில் 90 சதவிகிதவேலையை இந்த தற்காலிக பணியாளர்கள்தான் செய்து வருகின்றனர்.

பின்னர், நிரந்தர பணியாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். கொடுமை என்னவென்றால், அவர்களுக்கும் தற்காலிகபணியாளர்கள்தான் பயிற்சி அளித்து வருகிறார்கள். ஆனால், தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரபணியாளர்களை விட சம்பளம் குறைவு, பணி அதிகம். இதனால், தற்காலிக பணியாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்த தற்காலிக பணியாளர்களை கடந்த சிலமாதங்களுக்கு முன் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது வருகை பதிவேட்டில் இன்டு குறியீடு மட்டுமே போடப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எல்லா கல்லூரிகளின் விடைத்தாள்களுக்கும் தற்காலிகபணியாளர்கள்தான் டம்மி எண்கள் போட்டு வந்தனர். ஆனால் கடந்த வாரம் தீடீரென இந்த பணி ஒரு தனியார்சுயநிதி கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

3 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக 90 நாட்களுக்கு ஒருமுறை கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் எனஇவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் தங்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முன் ஏற்பாடு நடவடிக்கையாக இருக்குமோ எனதற்காலிக பணியாளர்கள் அஞ்சி வருகின்றனர்.

இவர்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதால், சம்பளச் சுமை அதிகமாக இருப்பதைக் காரணம்காட்டி, இவர்களை பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வாய் மொழி உத்தரவு வந்ததை அறிந்ததற்காலிக பணியாளர்கள், கலக்கத்துடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கபட்டு வந்த பணிகளும்குறைக்கப்பட்டு விட்டன.

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் செல்வாக்கால் இவர்கள் பணிக்குவந்திருந்தாலும், பெரும் தொகையை அமைச்சரின் ஆட்கள் பெற்றுக் கொண்டுதான் இவர்களைப் வேலைக்குஅமர்த்தினர்.

"எங்களைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் நிரந்தர பணியாளர்கள் எந்த பணியும் செய்வதில்லை. எங்கள்குறைகளை சிண்டிகேட் கூட்டத்திலும் பேசவில்லை. நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் பல்கலைக்கழக பணிகள்ஸ்தம்பித்து போய்விடும்" என்று தற்காலிகப் பணியாளர்கள் கூறி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X