ஜெ. Vs
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் கொடுப்பதாக ஜெயலலிதா உறுதியளித்தார் என்று மீண்டும்அடித்துக் கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
ஜெயலலிதா தன்னை அவமரியாதையாக நடத்தியதாக கூறி ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகினார்."அவருக்கு நான் எம்.பி. சீட் கொடுப்பதாக உறுதி அளித்தேன் என்று அவர் கூறுவது பொய். அவர்கூட்டணியிலிருந்து விலகக் காரணம் தேடிக் கொண்டிருந்தார். இப்போது ஏதோ ஒரு காரணம் கூறி விலகிவிட்டார்என்று ஜெயலலிதா கூறினார்.
இதை மறுத்த ராமதாஸ் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மத சார்பற்ற ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக நான் காரணம் தேடி வருவதாக ஜெயலலிதா சொல்வது முற்றிலும்பொய்.
நான் அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காரணம், ஜெயலலிதாவின் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாகஇருப்பதுதான். அவர் பதவி ஏற்ற நாள் முதலே அவரது நடவடிக்கைகள் மாறிவிட்டன.
நாங்கள் கேட்ட 27 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கியதாக அவர் கூறுவதும் பொய். நாங்கள் எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள 45 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்தோம். அதிலிருந்து 27 தொகுதிகளை ஒதுக்காமல், அ.தி.மு.க.போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று எண்ணிய தொகுதிகளைத்தான் எங்களுக்கு ஒதுக்கினார்.
அப்போதே ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட்டை பா.ம.கவுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.பா.ம.கவுக்கு ராஜ்யசபா தொகுதி அளிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும் என ஜெயலலிதாவும்அப்போது கூறினார்.
ஜெயலலிதா என்னைப் பார்ப்பதற்கு ஜூன் 18ம் தேதி நேரம் ஒதுக்கி இருந்தார். ஆகவே, அவரைப் பார்ப்பதற்காகநான் தலைமைச் செயலகம் சென்றிருந்தேன். 1 மணி நேரம்10 நிமிட நேரம் நான் அங்கு காத்திருந்த பின்புதான்ஜெயலலிதா என்னை சந்தித்தார்.
ஆனால், என்னுடன் 5 நிமிட நேரம் மட்டுமே பேசினார். இதுதான் கூட்டணிக் கட்சியினரை கண்ணியமாக நடத்தும்முறையா?
ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து ஜெயலலிதாவிடம் நினைவு படுத்தியபோது, கட்சி உறுப்பினர்களுடன் கலந்துஆலோசிப்பதாகக் கூறினார்.
கேட்டது கிடைத்த உடன் கூட்டணியை விட்டு விலகுவது என் வழக்கம் என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.அ.தி.மு.க.கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சிக்கும் ஜெயலலிதா சீட் ஒதுக்கியதில் திருப்தி இல்லை என்பதுஅனைவரும் அறிந்த உண்மை.
1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பா.ம.கவுடன் கூட்டணி அமைக்க வாழப்பாடிராமமூர்த்தியைத் தூது அனுப்பினார் ஜெயலலிதா. பா.ம.கவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்று உணர்ந்துதான் அவர் தூது அனுப்பினார்.
ஆனால், நாங்கள்தான் அவருடன் கூட்டணி வைக்க விரும்பியதாகவும், எங்கள் கட்சி உறுப்பினர்களைநாடாளுமன்றத்திற்கு அனுப்பியதற்கு தான்தான் காரணம் என்றும் இப்போது ஜெயலலிதா பொய் சொல்லிவருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களுக்குவாஜ்பாய் தானாகவே முன் வந்து மத்திய அமைச்சர் பதவி அளித்தார். அதன்படி பா.ம.கவுக்கும், ம.தி.மு.கவுக்கும்மத்திய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக நான்தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து பிரச்சாரம் செய்தேன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications