சென்னைக் குடிநீர் திட்டங்கள் - ஒரு பார்வை
சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குசத்தலை ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே சத்தியமூர்த்தி சாகர் என்று அழைக்கப்படும் பூண்டிநீர்த்தேக்கம் 1930களில் கட்டி முடிக்கப்பட்டது. அன்று முதல் சென்னைக்கு பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து நீர் கொண்டு வரப்படுகிறது.
பூண்டி நீர்த்தேக்கத்திற்குப் பின் பல திட்டங்கள் சென்னைக் குடிநீர்த் தேவைக்காக கொண்டு வரப்பட்டன. அவற்றில் முக்கியமான சில திட்டங்களைப்பார்ப்போம்.
1.வீராணம் திட்டம்:
நிறைவேறாமல் போன ஒரு திட்டம். வீராணம் ஏரியிலிருந்து தினசரி 45 மில்லியன் காலன் நீரை எடுத்து சென்னைக்கு அனுப்புவதற்காகத் தீட்டப்பட்ட திட்டம் இது. வீராணம் ஏரியிலிருந்து சிமென்ட் குழாய்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
வீராணம் ஏரியின் கதையை இங்கு கொஞ்சம் பார்க்க வேண்டும். காவிரியின் கிளை நதி கொள்ளிடம் ஆறு. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதெல்லாம் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருப்பி விடப்படும். கொள்ளிடத்திலிருந்து பிரிந்து செல்வது வடலாறு எனும் கால்வாய்.
இந்தக் கால்வாயிலிருந்துதான் வீராணம் ஏரிக்கு நீர் வருகிறது. காவிரியில் எப்போதும் வெள்ளம் வருவதில்லை. எனவே கொள்ளிடம் வழியாக வீராணம் ஏரியிலும் எப்போதும் நீர் வந்து கொண்டிருப்பதில்லை.
எனவே எப்போதும் வீராணத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. மேலும், காவிரியை நம்பி தஞ்சாவூர், திருச்சி, சேலம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் பாசனத்திற்காக உள்ளது.
எனவே காவிரி நீரை சென்னைக்கு உரிஞ்சினால் அதிகம் எடுத்தால், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அப்புறம் சோறு கிடைக்காது.
மேலும் வீராணம் ஏரி, மேட்டூர் அணையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏரியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பும் சொல்லில் அடங்காதது.
வீராணம் திட்டம் பலன் தராது என்று அரசிடம் பலமுறை எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் அரசு அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தது.
ஆனால் வீராணம் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்காது என்ற உண்மை நிலையைப் புரிந்து கொண்ட அரசு வீராணம் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது. இதற்காக செய்யப்பட்ட சிமெண்ட் குழாய்களில் ஆயிரக்கணக்கான தெருவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கேயே பல ஜெனரேஷன்கள் கண்ட குடும்பங்களும் உண்டு!.
2.நிலத்தடி நீர் திட்டங்கள்:
1960-களில் பொதுப் பணித்துறையின் ஒரு அங்கமாக நிலத்தடி நீர் பிரிவு துவக்கப்பட்டது. அன்று முதல் பல நிலத்தடி நீர் ஆய்வுகளை இப்பிரிவு மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரிவின் ஆய்வுப்படி சென்னையில் 30 மில்லியன் காலன் நிலத்தடி நீர் இருப்பு இருப்பது தெரிய வந்தது.
வட சென்னையில் உள்ள மீஞ்சூர், அஞ்செட்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆய்வு நிலையங்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நிலத்தடி தண்ணீர் இருப்புதான் இப்போது வரையிலும் சென்னையில் ஓரளவு குடிநீர் தேவைகளை தீர்க்க உதவி வருகிறது.
ஆனால், தொடர்ந்து மழை பொய்த்து வந்ததாலும், வட சென்னைப் பகுதியில் கடல் நீர் மெல்ல மெல்ல புகுந்து வருவதாலும் நிலத்தடி நீரின் இருப்பு வெகுவாக குறைந்து போய் விட்டது.
3.புதிய வீராணம் திட்டம் - 1993
கருணாநிதி கொண்டு வந்த வீராணம் திட்டத்தை கொஞ்சம் உல்டா செய்து உருவாக்கப்பட்டது தான் இந்த புதியவீராணம் திட்டம்.
ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற போது, தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் ரூ. 600 கோடிமதிப்பில் புதிய வீராணம் திட்டம் 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
அவர் சிமெண்ட் குழாய் என்று திட்டம் போட்டதால் ஜெயலலிதா உலோகக் குழாய்கள் மூலம் வீராணம்ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர இந்தத் திட்டத்தின் மூலம் பிளான் போட்டார்.
ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் நின்று விட்டது. தற்போது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன்மீண்டும் புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications