இன்று சென்னை வருகிறது கிருஷ்ணா நீர்
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் புதன்கிழமை மாலை அல்லதுஇரவுக்குள் தமிழக எல்லையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்குத்தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று ஆந்திர அரசுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
வினாடிக்கு 190 கன அடி நீர் என்ற அளவில் கிருஷ்ணா நீர் தற்போது தெலுங்கு கங்கை திட்டக் கால்வாய் வழியாகதமிழக எல்லை நோக்கி வந்து கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 152 கி.மீட்டரில் சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தை அது தாண்டி விட்டது. புதன்கிழமை மாலைஅல்லது இரவுக்குள் தமிழக எல்லையில் உள்ள தாமரைக்குப்பத்தை கிருஷ்ணா நதி நீர் வந்தடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தாமரைக்குப்பத்திலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 25 கிலோமீட்டர் தூர கால்வாயில் கிருஷ்ணா நீர் கொண்டுசெல்லப்பட்டு நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும்.
இருப்பினும் பூண்டி நீர்த்தேக்கத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பதில் பூண்டி கால்வாயிலேயே சேமித்து வைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உள்கால்வாய் ஒன்று 14 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு சேமிக்கப்படும் தண்ணீர் கருகம்பாக்கம் என்ற இடத்தில் தேக்கப்படும்.
அங்கிருந்து லாரிகள் மூலம் புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னர்சென்னை நகரில் வினியோகிக்கப்படும்.
மொத்தம் 600 லாரிகள் விநியோகப் பணியில் ஈடுபடவுள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications