போலீஸ் அராஜகம்: ஜனாதிபதி தலையிட திமுக கோரிக்கை
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டபோது போலீசார்முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண, இதில் ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் தலையிட வேண்டும் என தி.மு.கவினர் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.முரட்டுத்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு, மாநிலஅரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணைகமிஷன் அமைத்துள்ளது தமிழக அரசு.
இந்த கமிஷனை தி.மு.க. புறக்கணிப்பதாக தி.மு.க.தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், போலீசார் முறைகேடாக நடந்து கொண்ட விவாகாரத்திற்கு தீர்வு காண, ஜனாதிபதி கே.ஆர்நாராயணன் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து, ஜனாதிபதிக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.சுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன், தவறு செய்த போலீசாரை காக்கும் முயற்சிதான்.
இது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயலாகும், தவறு செய்த போலீசார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிஅளிப்பதும் தவறு என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications