எம்.எல்.ஏ. தவறு செய்தால் கைது செய்யலாம்: சபாநாயகர்
சென்னை:
குற்றம் செய்யும் சட்டசபை உறுப்பினர்களைக் கைது செய்ய போலீஸாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தமிழகசட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
கருணாநிதியைக் கைது செய்தபோது, போலீசார் செய்தது அத்தனையும் சரியே என்று சூடம் அணைத்து சத்தியம்செய்யாத குறையாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார்.
போலீசாரின் உற்சாகத்தைக் குறைத்தால், அவர்களால் சரிவர செயல்பட முடியாமல் போய்விடும். அதனால்,அவர்களை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்நிலையில், சபாநாயகர் காளிமுத்துவும், தன்னுடைய பங்குக்கு போலீசார் தலைமேல் "ஐஸ்" கட்டிகளை வைத்துக்கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டசபைை உறுப்பினர்களைக் கைது செய்யும் அத்தனை உரிமையும் போலீசாரிடம் உள்ளது.
இதில் அரசு தலையிடாது. சபாநாயகர் என்ற முறையில் நானும் தலையிட மாட்டேன்.
சட்டசபைக்கு வரும்போது, அனைவரும் ஒன்றே என்ற நிலைதான் உள்ளது. சட்டத்திற்கு முன்னர் அனைவரும் சமம்"என்று காளிமுத்து கூறினார்.












Click it and Unblock the Notifications