கார்கில் போரில் போட்ட குண்டு இப்போது வெடித்தது: 4 வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

கார்கில் போரின்போது போடப்பட்ட குண்டு கடந்த இரு தினங்களுக்கு முன்வெடித்தது. இதில் 4 இந்திய ராணுவ வீரர்கள் இறந்தனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்களை விரட்ட இந்தியா மேற்கொண்ட போரின்மூலம் காஷ்மீர் மாநிலத்திலுள்ள கார்கில் உலகம் முழுவதும் அறிமுகமானது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கார்கிலிலுள்ள கார்கில் முஷ்கு பள்ளத்தாக்கும் ஒன்று.

இந்தப் பகுதியில் 3 தினங்களுக்கு முன் ஒரு குண்டு வெடித்தது. இதில் 4 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்,9 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.

இதுபற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

கடந்த 1999ம் ஆண்டில் நடந்த கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவமும்இந்திய ராணுவமும் பெரும் அளவலான ஆயுதங்களைப் பயன்படுத்தின. இந்தப்பகுதியை இந்திய ராணுவம் இரண்டு மாத போருக்குப் பின் மீட்டது.

இங்கு இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டு ராணுவங்களும் பயன்படுத்திய பலகுண்டுகள் வெடிக்காமல் கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+