அரசு நிலம் விற்றதில் முறைகேடு: ஜெ. அதிரடி நடவடிக்கை
சென்னை:
ஓசூரில் உள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான ஒரு நிலத்தை ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மட்டுமேமுந்தைய திமுக அரசு விற்றுள்ளது குறித்து விசாரணை செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கேன்டீன் ஒப்பந்த அடிப்படையில் தனியாரால் நடத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்குஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.
தொழிற்பேட்டையில் பேக்டரிகளை அமைத்து வரும் தனியார்களுக்கே அந்த நிலம் விற்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஒரு ஒப்பந்ததாரர், இந்த அடிப்படையில் கேன்டீன் உள்ள இடத்தைத் தனக்கே விற்க வேண்டும் என்றுகோரினார். இது 1993ல் நடந்தது.
ஆனால், நிலத்தை விற்றுவிட்டால், கேன்டீன் அமைக்கப்பட்டதற்கான நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்என்று கருதிய அப்போதைய அதிமுக அரசு, நிலத்தை விற்க மறுத்துவிட்டது. இது தவிர, அந்த நிலத்தை விற்பதில்சில சட்டச் சிக்கல்களும் இருந்தன. அதனால், அந்த இடத்தை விற்கும் திட்டத்தைப் பற்றி மேலும் யோசிக்கவில்லைஅதிமுக அரசு.
பின்னர் 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசிடமும், அந்த ஒப்பந்ததாரர் மீண்டும் அந்த இடத்தை தனக்கு விற்குமாறுகோரினார். ஆனால் திமுக அரசும் அதை விற்க மறுத்துவிட்டது. 1996ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உத்தரவில் இதுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த நிலம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒருபுகாரை ஓசூர் மின்னணு தொழிற்பேட்டை தொழிலதிபர்கள் சங்கம் தமிழக அரசுக்கு அனுப்பியது.
ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை முந்தைய திமுக அரசு ரூ.4.2 லட்சத்துக்கு மட்டுமே விற்றுள்ளது. இந்நிலத்தைவிற்றதன் மூலம், தமிழக அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கேன்டீன் மீதான அரசின்கட்டுப்பாடு தளர்ந்துவிடும் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த நிலம் விற்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications