தி.மு.க. தொண்டர்கள் மீது மனித உரிமை மீறலா? மாத இறுதியில் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து போராட்டம்நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தி.மு.க. தொண்டர்கள் மீது சிறை அதிகாரிகளும்போலீசாரும் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகார் குறித்துவிசாரித்து வரும் மனித உரிமை கமிஷன் தனது அறிக்கையை இந்த மாத இறுதியில்சமர்பிக்க உள்ளது.

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து தி.மு.க. தொண்டர்கள்போராட்டம் நடத்தினர். இதனால் பல ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள்தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தொண்டர்கள் கொடுமைப் படுத்தப்படுவதாகவும், மனிதஉரிமைகளை மீறி சிறை அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்தார். தகுந்தநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சாமிதுரை, சுசீலா ராஜன் உள்ளிட்ட பல மனித உரிமை கமிஷன்உறுப்பினர்கள் சென்னை, புழல், வேலூர் மற்றும் மதுரை மத்திய சிறைகளுக்கு நேரில்சென்று விசாரணை நடத்தினர். ஸ்டாலினிடமும் விசாரணை நடத்தினர். அவர்களிடம்ஸ்டாலின் ஒரு புகாரையும் கொடுத்தார்.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறைக்கு சென்ற மனித உரிமை கமிஷன் உறுப்பினர்சம்பந்தம் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வாசுகி முருகேசன், ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலதி.மு.க. தொண்டர்களையும் விசாரித்தார்.

அதன் பின் நிருபர்களிடம் கூறுகையில் மனித உரிமை கமிஷனின் விசாரணை இந்தமாதம் 20ம் தேதியுடன் முடிவடைந்துவிடும். அதன் பின் கமிஷனின் அறிக்கை இந்தமாத இறுதியில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என்றார்.

சம்பந்தம் பாளையங்கோட்டை சிறைக்கு வெள்ளிக்கிழமை சென்று விசாரணை நடத்தஉள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+