எல்லையில் இந்திய-பாக். துப்பாக்கி சண்டை
ஜம்மூ:
டெல்லியில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபும் பேச்சுவார்த்தையில் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் சனிக்கிழமை காஷ்மீர் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் துப்பாக்கிச் சண்டையில்ஈடுபட்டன.
சனிக்கிழமை காஷ்மீரின் ரஜவரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியராணுவத்தினரை நோக்கி மெஷின் கன்களால் சுட்டனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர்.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சுட்டுக் கொல்வது சகஜம் தான் என்றாலும், வாஜ்பாயும் முஷாரபும் மிக உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது நடந்துள்ள இந்த மோதல் பெரும் ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் தான் இந்தத் தாக்குதலை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம்-தீவிரவாதிகள் சண்டை:
அதே போல தெற்கு காஷ்மீரில் ராணுவத்தினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராணுவத்தினர் அவர்கள் மீது திருப்பிச் சுட்டனர். இரு தரப்பிலும் பலத்த துப்பாக்கி சண்டை நடந்தது.தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 வயது சிறுமியும் மற்றொரு நபரும் இறந்தனர்.
ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் அருகாமைக் காட்டுப் பகுதியில் புகுந்து தப்பிவிட்டனர்.
வாஜ்பாய்- முஷாரப் பேச்சுவார்த்தையை பல தீவிரவாத அமைப்புகள் எதிர்த்து வருகின்றன என்பது முக்கியமானது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications