Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எது குறித்துப் பேசுவது?: இந்திய- பாக் இடையே கருத்து வேறுபாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தான் பிரச்சனையே, எனவே அது குறித்துத் தான் வாஜ்பாயுடன் பேசவிரும்புகிறேன் என முஷாரப் சனிக்கிழமை திரும்பத் திரும்பக் கூறினார்.


ஆனால், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்தி வரும் வன்முறை தான் மிகப் பெரியபிரச்சனை. அது குறித்துத் தான் நாங்கள் பேச விரும்புகிறோம் என இந்தியா தெரிவித்துள்ளது. காஷ்மீர் குறித்துபேசினாலும் கூட அங்கு நடக்கும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதம் குறித்துத் தான் பேசுவோம் எனஇந்தியா தெரிவித்துவிட்டது.

நேற்று (சனிக்கிழமை) இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபர் முஷாரப், தான் கலந்து கொண்ட அனைத்துநிகழ்ச்சிகளிலும் காஷ்மீரைத் தான் முக்கிய விஷயமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.

வந்திறங்கியவுடன் வெளியிட்ட அறிக்கையிலும், வாஜ்பாயுடன் பேசும்போதும், பாகிஸ்தான் தூதர் அளித்த டீபார்ட்டியில் ஹூரியத் போன்ற பிரிவினைவாதத் தலைவர்களுடன் பேசும்போதும் காஷ்மீர்....காஷ்மீர்... என்றுதான் பேசிக் கொண்டிருந்தார் முஷாரப்.

ஆனால், பிரதமர் வாஜ்பாயும் சரி, அமைச்சர்கள் அத்வானி, ஜஸ்வந்த் சிங் போன்றவர்களும் சரி பாகிஸ்தான்தீவிரவாதிகள் குறித்துத் தான் தங்களது பேச்சுவார்த்தைகளில் சுட்டிக் காட்டிய வண்ணம் இருந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ஆயுதங்கள், தீவிரவாதிகளை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனஅத்வானி நேரடியாகவே முஷாரபிடம் கூறிவிட்டார்.

அதே போல மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னணியாக இருந்த கடத்தல் பேர்வழி தாவூத் இப்ராகிம்,இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய ஆப்கான் தீவிரவாதிகள் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் அத்வானி கூறினார்.

தாவூத் மற்றும் விமானக் கடத்தல் கும்பல்கள் கராச்சியில் தான் பதுங்கியுள்ளனர் என்பதற்கான ஆவணங்களையும்அத்வானி கொடுத்தார்.

ஆனால், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் இல்லை என முஷாரப் கூறியதாகத் தெரிகிறது. அதே போல காஷ்மீரில்நடந்து வருவது சுதந்திரப் போரைப் போன்றது எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் குழுவினர் அங்கு தீவிரவாதிகளுக்குபாகிஸ்தான் உதவவில்லை எனவும் கூறியது.

ஆனால், காஷ்மீரில் துப்பாக்கிகள் முளைப்பதில்லை, அவை பாகிஸ்தானில் இருந்து தான் கடத்திக் கொண்டுவரப்படுகின்றன என இந்திய அமைச்சர்கள் பாகிஸ்தானிடம் தெளிவாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியபோதுபாகிஸ்தான் குழுவினரால் பதில் தர முடியவில்லை.

இதையடுத்து முறைப்படி பேச்சுவார்த்தை துவங்கும் முன் முதலில் வாஜ்பாயும், முஷாரபும் தனியே சந்தித்து எதுகுறித்துப் பேசுவது என முடிவு செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+