காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 15 வீரர்கள் சாவு
காஷ்மீர்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே உயர் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் காஷ்மீரில்தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
ஜம்மூ-காஷ்மீரில் லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் தாக்கியதில் 15 இந்திய ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.
இரு தற்கொலைப் படைகள் 2 இடங்களில் இந்தத் தாக்குதலை நடத்தின.
அதே போல ராணுவம் நடத்திய பல தாக்குதல்களில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் எல்லை அருகே குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஷாலால் மகம் என்ற இடத்தில் ராணுவ முகாமின் மீதுஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல பாரமுல்லாவில் இதே அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ராணுவ முகாமைத் தாக்கினர்.
இந்த இரு தாக்குதல்களிலும் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.
குப்வாராவில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வீரர்கள் திருப்பித் தாக்கினர். ஆனால்,வீரர்களிடம் சிக்காமல் தீவிரவாதிகள் தப்பிவிட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான இரு ராணு முகாம்களும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் ராணுவ பிரிவினர்தங்கியிருந்த முகாம்களாகும்.
20 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் 2 இடங்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சுரான்கோட் தென்சில் பகுதியில் ராணுவத்தினர் வீடு வீடாகசோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 20 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராணுவத்தினர் அவர்களை சரணடையக் கோரினர். ஆனால், அவர்கள் ராணுவத்தினரை நோக்கிதுப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்கள் திருப்பிச் சுட்டதில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பெரும்அளவிலான ஆயுதங்கள், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது:
பெரும் அளவிலான குண்டுகளுடன் பதுங்கியிருந்த 2 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகளை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துபறிமுதல் செய்யப்பட்டது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications