சென்னையில் பலத்த மழை
சென்னை:
சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கி வரும்செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
சென்னை நகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறுநடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நெய்வேலி, ஈரோடு, மேட்டூர் ஆகிய இடங்களில் இருந்து தண்ணீர் "இறக்குமதி" செய்யப்பட்டு, சென்னைமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆந்திராவின் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்தும் கிருஷ்ணா நீர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள்வந்தன. ஆனால் கடந்த ஜூலை 12ம் தேதியே வரவேண்டிய கிருஷ்ணா நீர் இன்னும் வந்த மாதிரி தெரியவில்லை.
இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக ஜூலைமாதத்தில் ஓரளவு பெய்யும் மழையை எதிர்பார்த்து சென்னை நகர மக்கள் காத்திருந்தனர்.
அதிர்ஷ்ட வசமாக கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமையும்ஞாயிற்றுக்கிழமையும் இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.
இதனால் நகரில் குளிர்ச்சி நிலவியதோடு ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 24மி.மீட்டரும், சோழவரம் ஏரியில் 9 மி.மீட்டரும், புழல் ஏரியில் 4மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடிநீர் இருப்பும் அதிகரிப்பதற்கு அதிகவாய்ப்புள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications