வாஜ்பாய்-முஷாரப் மீண்டும் பேச்சுவார்த்தை
ஆக்ரா:
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வாஜ்பாய்-முஷாரப் இடையிலான உயர் மட்ட பேச்சுவார்த்தை திங்கள்கிழமையும்தொடர்ந்தது.
இரு தலைவர்களும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் சந்தித்தனர். வாஜ்பாய் தங்கியுள்ள ஜேபி பாலஸ்ஹோட்டலுக்கு முஷாரப் வந்தார். அங்கு தான் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானியுடம் வாஜ்பாய்தீவிர ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தான் முஷாரபுடன் பேச்சுவார்த்த்ைககுச் சென்றார்.
பேச்சுவார்த்தைக்கு முன் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிக்கைளின் ஆசிரியர்கள் முஷாரப்பைச் சந்தித்துப் பேசினர்.அப்போது பேசிய முஷாரப்,
பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றன. காஷ்மீர் குறித்து தான் நான் அதிகம் பேசவிரும்புகிறேன். ஆனால், அதை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை.
நான் திரும்ப பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றால் காஷ்மீர் குறித்து நான் விவாதித்துத் தான் ஆக வேண்டும்.காஷ்மீர் குறித்து நான் பேசக் கூடாது என்று இந்தியா கருதினால் எனக்கு உள்ள ஒரே வழி டெல்லியில் உள்ள எனதுகொள்ளுத் தாத்தாவின் வீட்டை வாங்கி இஙகேயே தங்கிவிடுவது தான்.
காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் பேச வேண்டியதே இல்லை என்று இந்தியா (வாஜ்பாய்) கருதுகிறது. இந்தியாதனது இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரை பேச்சுவார்த்தைகளால் அதிக பலன் ஏதும் ஏற்பட்டுவிடாது.காஷ்மீர் ஒரு மிகப் பெரிய பிரச்சனை. அதை முதலில் இந்தியா ஒத்துக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் மக்கள் இந்திய அரசை நம்பவில்லை. அதே போல பாகிஸ்தானை இந்திய மக்கள் நம்பவில்லை.
இதை மாற்றாத வரை இரு நாடுகளும் நல்லுறவை எட்டுவது சுலபமில்லை. பெரிய அளவில் பலன்கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். இரு நாடுகளும்பேச்சுவார்த்தையைத் தொடங்கியது கூட பெரிய முன்னேற்றம் என்று தான் நினைக்கிறேன்.
இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தவேண்டும். அதற்கேற்ற வகையில் ஒரு திட்டத்தை இந்தப் பேச்சுவார்த்தையில் வகுக்க வேண்டும் என்றுஇந்தியாவைதக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளையும்தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் சிறைகளில் இந்திய வீரர்கள் போர் கைதிகளாக இருந்தால் உடனடியாக அவர்களை விடுவிப்பேன்.இதில் நானே நேரடியாக தலையிட்டு உடனடியாக ஆக வேண்டியதைச் செய்வேன். நானும் ஒரு ராணுவ வீரன்தான், போர்க் கைதி என்றால் என்ன என்று தெரியும், அதன் வலியையும் நான் உணர்வேன்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு கண்டுவிட முடியாது. படிப்படியாக நாம்பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று நம்புகிறேன்.
காஷ்மீர் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம் அல்ல என்ற இந்தியாவின் கருத்தை ஏற்கிறேன்.இந்தியா கூறி வருவது போல் அது ஒரு பிரச்சனை தான்.
கார்கில் குறித்து எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். சிம்லா ஒப்பந்தத்தை மீறி சியாச்சினில் இந்தியாஊடுருவியபோது நாங்கள் அடைந்த வேதனைக்கு யார் பதில் சொல்வது. பழைய வரலாற்றை மறப்போம். இனிநல்லுறவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.
இவ்வாறு முஷாரப் கூறினார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications