இலங்கை: கண்ணி வெடியில் சிக்கி 9 வீரர்கள் படுகாயம்
கொழும்பு:
இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் புதன்கிழமை காலை ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் 9 ராணுவ வீரர்கள்உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளால் நடத்தியிருப்பார்கள் என்றுராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த 10 பேரில் 9 பேர் ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் அடங்குவர்.
இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பலாலி ராணுவமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் நடந்த உடன் அந்த இடம் ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டது. கண்ணிவெடியை வெடிக்கவைத்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .
இன்றுதான் இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டிகளில்பங்கேற்பதற்காக இந்திய அணியும் அங்கு சென்றுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கண்ணிவெடித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சப் -இன்ஸ்பெக்டர் கொலை:
இந்நிலையில் திரிகோணமலை அருகில் உள்ள ஆலங்கெர்னியில் பணிக்குச் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தசப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டவர்கள் அவரதுதுப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர் என ராணுவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பகுதியில், வல்வெட்டித்துறையில் குருக்கையாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிசண்டைையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவரும், பொதுமக்களில்ஒருவரும் காயமடைந்தனர் என்றும் ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications