வெளிநாட்டில் வேலை: சென்னையில் ரூ.2 கோடி மோசடி
சென்னை:
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடி பணம் வசூல் செய்து இளைஞர்களை ஏமாற்றிஉள்ளது சென்னையில் உள்ள ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம்.
இளைஞர்களின் இந்த வெளிநாட்டு மோகத்தை பயன்படுத்திக் கொள்ளும் சில தனியார் வேலை வாய்ப்புநிறுவனங்கள், அயல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏராளமான பணம் வசூல் செய்தபின், அந்தபணத்துடன் தலைமறைவாகி விடுகின்றனர்.
ஆனாலும், பல இளைஞர்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது சென்னையில்செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி வரைமோசடி செய்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் நிச்சே டெக்னாலஜீஸ் என்னும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டுவந்தது. ஸ்ரீகுமார் மற்றும் ராஜன் என்கிற நடராஜன் ஆகிய இருவரும் இந்நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இங்கிலாந்தில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகவும், சாப்ட்வேர் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும்,ஆசிரியர் பணி வாங்கித் தருவதாகவும் கூறி இவர்கள் விளம்பரம் செய்தனர். இதற்காக, இவர்களிடம் வரும்ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.60,000 வசூல் செய்தனர்.
ஏராளமானவர்கள் பணம் செலுத்தி தங்கள் பாஸ்போர்ட்டையும் கொடுத்தனர். ரூ.2 கோடி பணம் வசூலானது. பணம்செலுத்திய அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மருத்துவ சோதனை முடிந்தபின் அவர்களைநேர்முகத் தேர்வுக்காக சென்னையில் இருக்கும் ஓட்டல் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை வருமாறு நடராஜன் கூறினார்.
ஆனால் அங்கு சென்றவர்களுக்குப் பெரும் ஏமாற்றம்தான் காத்திருந்தது. பணத்துடன் நடராஜன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. ஆனால், ஸ்ரீகுமார் போலீசில் சரணடைந்தார்.
அவர் போலீசில் கூறும்போது:
வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் நடராஜன் பேரிலேயே வங்கியில் கட்டப்பட்டது. என்னிடம் பணம்எதுவும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களின் பாஸ்போர்ட் மட்டும்தான்.
நான் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறேன். எனக்கு நடராஜனுடன் தொடர்பு ஏற்பட்டது. தனக்கு இங்கிலாந்தில்பலருடனும் தொடர்பு உள்ளதால் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் தொடங்கும் திட்டத்தை மேற்கொண்டதாகக்கூறினார் நடராஜன்.
அதன்படி, தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் தொடங்கபப்பட்டது. நாங்கள் இருவரும் இணைந்து நர்ஸ்பணிக்கும், சாப்ட்வேர் துறைக்கும், ஆசிரியர் பணிக்கும் நேர்முகத் தேர்வு நடத்தினோம். மொத்தம் 169நர்சுகளையும், 60 சாப்ட்வேர் நிபுணர்களையும், 11 ஆசியர்களையும் நேர்முகத் தேர்வு செய்தோம்.
நர்சுகளை நேர்முகத் தேர்வு செய்யும்போது தன்னை ஒரு டாக்டர் போலவும், சாப்ட்வேர் வல்லுனர்களை நேர்முகத்தேர்வு செய்யும்போது சிறந்த கம்ப்யூட்டர் வல்லுனர் போலவும், ஆசியர்களை நேர்முகத் தேர்வு செய்யும்போதுசிறந்த அறிவாளி போலவும் நடராஜன் காட்டிக் கொள்வார் என்றார் ஸ்ரீகுமார்.
இதுகுறித்து, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்துடன் தலைமைறைவாகிவிட்ட நடராஜனையும், அவரதுமனைவியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜெ.யிடம் புகார் மனு கொடுத்தனர்:
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை காலை சென்னையில் உள்ள தமிழகதலைமைச் செயலகம் சென்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் நேரில் சந்தித்து, இது சம்பந்தமாகஒரு புகார் மனுவை அவரிடம் கொடுத்தனர்.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications